"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Wednesday, June 1, 2011

அன்பாய் இரு.....

அன்பாய் இரு
ஆணவத்தை ஒடுக்க‌
துணியாதே


இயல்பாய் இரு
ஈ என இளித்து
உன்னை
வெளிப்படுத்திவிடாதே


உன்னை கட்டுப்படுத்தாதே
ஊடுருவும் கண்களை
சந்திக்கத் துணி


எட்டி நிற்கும்
புகழுக்காக‌
மயங்கி ஏங்காதே

ஏனெனில் புகழ்ச்சி
உனக்கு வாழ்த்தும்
ஆசியுமே...


ஐய‌ப்பாடு உண்டோ
இன்னும் உன‌க்கு?


ஒப்ப‌னை இல்லாத‌
வெள்ளை ம‌ன‌துன‌க்கு

ஓடுகிறாயா பய‌ந்து
ஓடினால் துர‌த்தும்
உல‌க‌ம் இது


நின்று நிதானி
திற‌மைக‌ளை
வெளிக்கொண்டுவா


த‌ய‌க்க‌மும் க‌ல‌க்க‌மும்
உன்னை அட‌க்கிவிடும்


மூத்த‌வ‌ர்க‌ளை வண‌ங்கு
ந‌ட்பை உய‌ர்வுப‌டுத்து
நாடி வ‌ரும்
ச‌கோத‌ர‌த்துவ‌த்தை
ஏற்றுக்கொள் அன்போடு


ப‌ண‌ம் பேசுவ‌தில்லை இங்கு
ம‌ன‌ம் ம‌ட்டுமே
ப‌கிர்ந்துக்கொள்கிற‌து


உண்மை மட்டுமே
உரைக்கும் அன்பை
முழுமையாய் பகிர்......

6 comments:

  1. ஊடுருவும் கண்களை சந்திக்கத் துணி..
    இந்த வைர வரிகள்
    நிமிர்ந்த நன் நெஞ்சும் நேர்கொண்ட பார்வையும்
    என்ற பாரதியின் கனவுப் பெண்களை
    நினைவுறுத்திப்போகுது
    தரமான படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. உங்கள் பதிவிற்கு ரமணிசார் பதிவின் வழியாக வந்தேன் முதன்முதலாக. எளிமையாக வாழ்வியலைப் பேசுகிறீர்கள். தொடரட்டும் உங்கள் கவிதைப்பணி. ஒரு சின்ன நெருடல் முதல் வரியில் அன்பாய் இரு...ஆணவத்தை ஒடுக்க துணியாதே என்கிறீர்கள். ஆணவத்தை ஒடுக்கினால்தானே அன்பு மலரும். கொஞ்சம் முரணாக எனக்குத்தெரிகிறது மற்ற வரிகள் சரியாகப் போகின்றன. நன்றி. தொடர்ந்து வாசிப்பேன்.

    ReplyDelete
  3. உங்கள் மேலான அன்பு விமர்சனத்துக்கு அன்பு நன்றிகள் ரமணி சார்.... பாரதி எனக்கும் இஷ்டமான கவிஞன்....

    ReplyDelete
  4. ரமணி சார் மூலமாக இங்கு வருகை தந்தமைக்கு முதலில் என் அன்பு நன்றிகள் ஐயா...

    மற்றவர்களின் குறையை நீக்க முயலாமல் நான் என்றும் அன்பாய் இருக்க முயல்கிறேன். இந்த கவிதை வரிகள் எனக்கு நான் அறிவுரை சொன்னதாக நினைத்து எழுதியது... மற்றவர் ஆணவத்தை அடக்க இறைவன் இருக்கும்போது என் அன்பை மட்டுமே பகிர்வதே இறைவன் என்றும் என் உயிர் பிரியும்வரை கொடுக்கும் நல்ல வரமாகவே நினைக்கிறேன் ஐயா..

    கவிதை படித்து விமர்சனம் பகிர்ந்தமைக்கு என் அன்பு நன்றிகள் ஐயா....

    ReplyDelete
  5. பொன்மொழி பலவும் இங்கே-மனம்
    போற்றவே நெஞ்சில் உலவும்
    நன்மொழி தந்தீர் வாழ்க-எல்லா
    நலன்களும் உம்மை சூழ்க

    புலவர் சா இராமாநுசம்
    புலவர் குரல்

    ReplyDelete
  6. அடடா புலவர் ஐயா இங்கு வந்து பதித்த கருத்தை நான் இன்று தான் பார்க்க நேர்ந்தது ஐயா.. அதற்கு மன்னிப்புகள் கேட்டுக்கொள்கிறேன் ஐயா... அன்பு நன்றிகள் ஐயா இதை தான் அங்க சொல்லி இருக்கீங்கன்னு இங்கு படிக்கும்போது தான் தெரிந்தது ஐயா.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...