”ஏன் இப்படி சொன்னான்?” மனம் சமாதானம் அடைய மறுத்தது மகிஷிக்கு…
”என் அன்பில் என்ன தான் குறை கண்டான்?” கண்ணீர் அடக்கமுடியாது கன்னம் நனைத்தது….
”கல்யாணம் ஆகி நாலு வருடம் முடியும் நிலையில் இப்படி ஒரு வார்த்தை அவன் வாயில் வரக்காரணம்?” தலைவலி விண் விண் என்று தெறித்தது…
இத்தனைக்கும் காதலித்து கைப்பிடித்த கண்ணாளன் தானே? என்னை நேசிக்கவில்லை என்று சொல்லமாட்டேன்….மனம் ஒரு நிலையில் இல்லை மகிஷிக்கு….
காலை வீட்டில் நடந்ததை மெல்ல நினைத்து பார்த்தாள் மகிஷி…
ஏண்டி என்ன தான் மனசுல நினைச்சுட்டு இருக்கே நீ?
ஏன்பா என்னாச்சு என்றபடி தலைதுவட்டிக்கொண்டே வந்து ஷ்யாம் எதிரில் வந்து நின்றாள் மகிஷி…
இதென்ன முகத்தில் விட்டெறிந்தான் பேப்பரை ஷ்யாம்…
சுரீலென்று பேப்பரின் முனை அவள் கண்ணை தாக்கி இமை தடுக்குமுன் கண்ணின் கருவிழியில் பேப்பரின் முனை கத்தியின் கூர்மையாய் குத்தி தரையில் விழுந்தது….
யாரைக்கேட்டு அந்த பன்னாடைக்கு லோன் சாங்ஷன் செய்தே?
ஓஹோ ஆபிசுல உங்க விரோதி பாலு வந்து லோன் கேட்ட விவரம் சொல்றீங்களா??
முகம் கடுகடுவென்று வைத்துக்கொண்டு ஜன்னலில் பார்வையை செலுத்தினான் ஷ்யாம் மகிஷியின் முகம் பார்ப்பதை தவிர்த்து…
ப்ளீஸ் இப்படி கோபப்படாதீங்க…. பாலுவுக்கு இப்ப நிறைய கடனாம்… அதான் வந்து லோனுக்கு அப்ளை செய்திருந்தான்….
அவன் நமக்கு செய்த கெடுதலை மறந்துட்டியா மகிஷி? நம்ம குழந்தை சாக காரணமே அவன் தான்னு மறந்துட்டியேடி பாவி என்று தலையில் அடித்துக்கொண்டு கண்ணீரை அடக்கமுடியாமல் கேவினான் ஷ்யாம்….
ப்ளீஸ் அழாதீங்க…. நாம கொடுத்த பணத்தை நமக்கே அவசரம்னு நீங்க கேக்க போனப்ப அவன் உங்கள அவமானப்படுத்தி அனுப்பினது என்னிக்கோ நடந்த ஒன்று….
என்னிக்கோன்னா அப்ப நம்ம மானசா இன்னிக்கு நம்ம கூட இல்லாம போனதுக்கு இந்த பாவி தானே காரணம் அதை மறந்துட்டியா நீ? அன்னிக்கு அவன் பணத்தில் கொழிச்சானே.. நான் கொடுத்த 5 லட்சத்தை திருப்பி கேட்க போனப்ப காறி துப்பாத குறையா விரட்டி அடிச்சானே.. பணம் கொடுக்க முடியாம மானசா நம்ம கண் முன்னாடியே துடிச்சு துடிச்சு உயிர் விட்டதை நீ மறந்திருக்கலாம் ஆனா நான் மறக்கலடி…
அவனுக்கு நீ லோன் சாங்ஷன் பண்ண வேண்டிய அவசியம் என்னடி வந்திச்சு… அவன் எக்கேடுகெட்டோ ஒழியட்டும்னு விடாம அவனுக்கு விருந்து உபசரிப்பு வேற ச்சீ நீ எல்லாம் ஒரு தாயா ??
இப்ப யோசிக்கிறேண்டி…. உன்னை ஏன் அப்படி உருகி உருகி காதலிச்சேன்னு இப்ப யோசிக்கிறேண்டி….
உன் உறவு, உன் காதல் எனக்கு தேவையான்னு இப்ப யோசிக்கிறேண்டி….
நான் திரும்பி வரும்போது நீ இங்க இருக்க கூடாது எங்க ஒழியிறியோ ஒழி… ஆனா இனி நீ என் கண் முன்னாடி இருக்க கூடாது…..அருகில் இருக்கும் நாற்காலியை எட்டி உதைத்துவிட்டு எழுந்து சட்டை மாட்டிக்கொண்டு தெருவில் இறங்கினான் ஷ்யாம்…
நான் மறக்கலப்பா மறக்கலப்பா என்று கதறி அழத்தொடங்கினாள்…
அன்னிக்கு நாம 5 லட்ச ரூபாய் கிடைக்காம நம்ம மகளை இழந்ததோட முடியட்டுமேப்பா… பாலுவோட பையனுக்கு இருதயத்துல ஓட்டைன்னு எவ்ளவோ வைத்தியம் செஞ்சு சொத்தெல்லாம் கரைஞ்சு இன்னிக்கும் அதுக்காக தாம்பா லோன் கேக்க வந்தான் உயிரின் மதிப்பு எனக்கு தெரியும் ஷ்யாம் என்று சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்து அழுதாள் மகிஷி….
சுவற்றில் இருந்த கடிகாரம் எட்டு முறை அடித்து ஓயவே சுயநினைவுக்கு வந்தாள் மகிஷி.. ஐயோ இன்னைக்கு ஆடிட்டிங் வேற இருக்கே… அரக்க பரக்க தயாராகி பசிக்கும் வயிற்றை அதட்டி ஓடினாள் பஸ்ஸை பிடிக்க…
உன் காதல் எனக்கு தேவையான்னு யோசிக்கிறேன்….
உன் உறவு எனக்கு தேவையான்னு யோசிக்கிறேன்….
நான் திரும்பி வரும்போது நீ இங்க இருக்கக்கூடாது….
மகிஷியால் லெட்ஜரில் மனம் ஒன்றி வேலை செய்ய முடியவில்லை…
ஆடிட்டிங் முடிந்து ஆட்கள் வெளியேறியப்பின் அன்றைய அலுவல்களை தொடர்ந்தாள் மகிஷி மனம் மட்டும் நிலைக்கொள்ளாமல் தவித்தது…
அருகில் இருக்கும் இண்டர்காம் அலறி மகிஷியை வீட்டு நினைவில் இருந்து நிகழ்வுக்கு கொண்டு வந்தது…
யெஸ் ஸார்…
மேனேஜர் துஷாரின் கழுகுக்கண்கள் எப்போதும் முகம் நோக்குவதில்லை.. இது ஒரு எரிச்சலான விஷயம்… துஷார் இந்த கிளைக்கு வந்து ஒரு ஆண்டு முடிந்தது… அவன் பார்வையில் அசிங்கம் தெரிவதைக்கண்ட மகிஷி உடல் முழுதும் மூடிய உடைகளை உடுத்தி வர ஆரம்பித்தாள்.. ஆனாலும் அவளை பலமுறை தன் அறைக்கு கூப்பிட்டு எதாவது கேட்டு அவளை அழவைப்பான்…
தும்னே க்யா கலத் கியாஹ் கபி தேக்கா?
ஸார் என்றபடி வார்த்தைகளில் மனம் ஒன்றாமல் இன்னமும் ஷ்யாமின் வார்த்தைகளில் மனம் துடித்தபடி நின்றாள்….
தும்கோ சுனாநஹி தேராஹ்?
கர்ஜித்த குரலில் அவன் கத்தியதும் யெஸ் ஸார் என்றாள் பயந்தபடி…
இஸ்தரா முஜே காம் நஹி ச்சாயியே… தும்னே லெட்ஜர் தேக்கா…?
ஐயோ தப்பு செய்துவிட்டோமே என்று நடுங்கினாள் மகிஷி…
சாரி சார்…. அபி டீக் கர்தூங்கி….
அவன் காதில் கேட்கவில்லை… சரமாரியாக கத்த ஆரம்பித்தான்…
வேலை செய்ய வந்துட்டால் கவனம் வேலைல இருக்கணும்..
என்ன வீட்டில் எதுனா சண்டையா? உன்னிடம் உன் புருஷன் எதுனா சண்டை போட்டாரா?
மூர்க்கமாக தலை உதறி நோக்கினாள் மகிஷி… கோபத்தை அடக்கிக்கொண்டு நெவர் சார் வீட்டில் எனக்கு எப்போதும் பிரச்சனை இல்லை…
அப்ப உன் கவனம் எங்கே இருந்திச்சு? எத்தனை முறை சொல்லி இருக்கேன் உனக்கு? நீ ரோட் கிராஸ் தவறாக கிராஸ் செய்து செத்து போனப்பின் தப்பா கிராஸ் செய்தேன்னு சொல்ல கூட உயிரோடு இருக்கமாட்டே தெரியும்ல?
சார் ப்ளீஸ் என்றாள்…
செத்து பாரு அப்ப தான் தெரியும் உனக்கு என்று இன்னமும் குரல் உயர்த்தி கத்தினான் துஷார்…
யூ வாண்ட் மீ டு டை சார் என்று பரிதாபமாக கேட்டாள் மகிஷி…
அவன் முகம் மாற ஆரம்பித்தது… ஆக்சிடெண்ட்ல செத்து காமி… அப்ப சொல்றேன் நான் என்று எழுந்து வெளியே போக ஆரம்பித்தான் துஷார்…
மகிஷிக்கு அழுகை அடக்க முடியவில்லை… ஷ்யாம் என்னடாவென்றால் உன் காதல் எனக்கு தேவையான்னு யோசிக்கிறேன் என்கிறான் அப்படின்னா அவனுக்கு தேவையா இருந்தப்ப நான் அவனுக்கு அவசியப்பட்டேனா என்று அழுதாள்….
இங்கே இவன் என்னடாவென்றால் ஆக்சிடெண்ட்ல செத்து போன்னு சொல்றான்…
மதியம் உணவும் சாப்பிடாமல் அழுதுக்கொண்டே இருந்தாள் மகிஷி…
மாலை ஆனதும் எல்லோரும் போக ஆரம்பித்தனர்… இனி தான் எங்கே போவது? என்னை உயிராய் நேசித்து மணந்தவன் என்னை பார்க்கவே இஷ்டப்படவில்லை என்று சொல்லிவிட்டான்…. இவனோ சாக சொல்கிறான்…
யோசித்துக்கொண்டே ரோட்டை கிராஸ் செய்தாள் மகிஷி….
இருபக்கமும் பார்க்கவேண்டும் ரோடு கிராஸ் செய்யும்போது என்று சொல்லி அணைத்து ஷ்யாம் அழைத்து சென்ற நொடிகளை நினைத்துக்கொண்டே ரோட்டை கடக்கும்போது….
ஐயோ என்னாச்சு என்னாச்சு பலவித குரல்கள்…
யாரோ ஒரு பொம்பிளை பஸ் வரது தெரியாம ரோட்டை கிராஸ் பண்ணிருச்சு போல வேகத்தை கட்டுப்படுத்த முடியாம பஸ் அந்த பொம்பிளை மேலே மோதி மேலே ஏறி இறங்கிடுச்சு..
ஐயோ பாவம் உயிர் இருக்கா?
” ஸ்பாட் டெட் “
ஷ்யாம் சொன்னமாதிரி ஷ்யாமுக்கு இனி தான் தேவையில்லைன்னு தெரிஞ்சதும் இனி உயிரோடு இருந்து என்ன செய்யப்போறோம்னு நினைச்சிருப்பாளோ மகிஷி?
ஆனால் தான் உயிரோடிருப்பது பலபேருக்கு தொந்திரவுன்னு தெரியாமயே உயிர் விட்டுட்டாளோ மகிஷி????
Tweet |
கோபத்தில் உதறும் வார்த்தைகள்... வலிகளாய் இளகிய மனதை கீறி மனம் நிலையில்லாதபடியாகி வாழ்கை மிக கசப்பாய் பிடிமானம் இல்லாத போனால் மகஷி மட்டுமல்ல எந்த மனுஷியாலும் வாழ்வது கடினமே.... (குறிப்பு: கணவனின் கோபத்தில் பாதிப்பு இருந்தது.. அவன் உண்மையானவன் அவளின் இழப்பால் வருந்தட்டும் , ஆனால் மேனேஜரோ வக்கிரமானவன் அவன் இறைவனால் தண்டிக்கப்பட்டு திருந்தட்டும்)
ReplyDeleteஒரு ஆதங்கமான கணவனின் கோபத்திற்கும்,
ReplyDeleteவக்கிரமான மேலாளரின் வார்த்தைக்கும்
பலி ஒரு விலை மதிக்கமுடியாத உயிரா??
மனம் கனக்கிறது.
மனம் கனக்கிறது.
ReplyDeleteசாவு ஒன்றுதான் முடிவா?.
இப்படி மனதைப் பறி கொடுத்து, யாராரோ சொல்வதால் பந்தாக உருண்டு, மனம் பேதலித்து தடுமாறியதால் வந்த வினை இது. அட்லீஸ்ட் 2 நாளைக்கு ஒரு சிநேகிதி வீட்டில் நின்று, பின் பிரச்சனைகளைத் தீhத்திருக்கலாம். இப்படிச் செத்துத் தொலைத்திருக்கத் தேவையில்லை. இது எனது கருத்து. பொதுவாகச் கதைகள் நான் வாசிப்பதில்லை. மஞ்சும்மாவிற்காக வாசித்தேன். வாழ்த்துகள்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.co
பெண்கள் ஆண்களுக்கு அடங்கிப்போவது போல் எழுதியது ஏதோ செய்கிறது அவளை வாழ விட்டிருக்கலாம் சகோதரி...
ReplyDeleteகாட்டான் குழ போட்டான்..
மிக கவனமாக கதை சொல்லி இருக்கிறீர்கள்
ReplyDeleteஇதுபோன்ற தொடர் சீண்டல்களில் ஏற்படும் குழப்பம்தான்
அவளைக் கொன்றுவிடுகிறதே ஒழிய
அவள் தற்கொலை செய்து கொள்ளவில்லை
நாம் ஒருவர்தானே இவருக்கு எரிச்சல் ஊட்டுகிறோம் என்கிற
தவறான எண்ணத்தில் யாரும் யாரையும் மனம்
நோகப் பேசவேண்டாம்
ஒருவேளை நாம்கூடஅந்தத் தொடர்ச்சியின் கடைசி நபராக இருக்கலாம்
என எச்சரிக்கை விடும் கதையாகக் கூடஇதைப்
புரிந்து கொள்ளலாம்
தரமான படைப்பு
தொடர வாழ்துக்கள்
சரியாக க்ரஹித்து விட்டீர்கள் ரமணி சார்... கதையின் போக்கை.... மனம் நிறைந்த அன்பு நன்றிகள் ரமணி சார்...
Deleteவேண்டாம் சகோதரி இந்த
ReplyDeleteவேதனை முடிவான கதைகள்
மனதை என்னவே செய்கிறது
நல்ல முடிவுள்ள சில கதைகள்
எழுதி பின் தொடருங்கள்
நீங்கள் தலை சிறந்த
சிறுகதை எழுத்தாளராக எதிர்
காலத்தில் வருவீர்கள் அதில் ஐயமில்லை
இதுவும் முன்னர் எழுதியதும்
மனதை விட்டு அகலாதவை!
வாழ்த்துக்கள்!!
புலவர் சா இராமாநுசம்
தமிழ் மீதான ஆர்வம் கொண்ட ஒரு சாதாரண தமிழ்நாட்டுப்பெண்ணுக்கு வணக்கம்...
ReplyDelete”யோசித்துக்கொண்டே ரோட்டை கிராஸ் செய்தாள் மகிஷி….
இருபக்கமும் பார்க்கவேண்டும் ரோடு கிராஸ் செய்யும்போது என்று சொல்லி அணைத்து ஷ்யாம் அழைத்து சென்ற நொடிகளை நினைத்துக்கொண்டே ரோட்டை கடக்கும்போது….
ஐயோ என்னாச்சு என்னாச்சு பலவித குரல்கள்…”... கலங்க வைத்துவிட்டது...
உண்மையே மாய உலகம் ராஜேஸ்.... திருந்தட்டும்....
ReplyDeleteஅன்பு நன்றிகள் கருத்து பதிந்தமைக்கு...
அன்பு நன்றிகள் இராஜராஜேஸ்வரி தங்களின் அன்பு கருத்துக்கு....
ReplyDeleteஎன்ன செய்வது இப்படி ஆகிவிடுகிறதே...
அன்பு நன்றிகள் பரிவை சே குமார்....
ReplyDeleteஎன்ன செய்வது ஹூம்....
மனதை கனக்க வைத்த கதை. படிக்கும் போதே இது தான் முடிவென்று கணித்தேன்.
ReplyDeleteஅன்பு வரவேற்புகள் வேதாம்மா...
ReplyDeleteஅன்பு நன்றிகள் வேதாம்மா கருத்து பதிந்தமைக்கு...... என் கதைகளை தேடி படிக்கும் உங்களுக்கு என் அன்பு வணக்கங்கள் வேதாம்மா... உங்கள் ஆசிகளை என்றும் வேண்டிடும் அன்புக்குழந்தை மஞ்சு....
அன்பு வரவேற்புகள் காட்டான் சகோ....
ReplyDeleteஅடங்கி போகவில்லை சகோதரரே.... என்ன செய்வது என்ற குழப்ப மனநிலையில் மகிஷி தத்தளித்திருக்கிறாள்....
அன்பு நன்றிகள் சகோதரரே கருத்து பதிந்தமைக்கு....
அன்பு நன்றிகள் இராமானுசம் ஐயா.....
ReplyDeleteஇனி கவனமாக எழுதுகிறேன் ஐயா கதைகள் வேதனை முடிவு இல்லாதபடி....
அன்பு வரவேற்புகள் சித்திரன்....
ReplyDeleteஅன்பு நன்றிகள் கருத்து பதிந்தமைக்கு....
அன்பு நன்றிகள் சிவகுமாரன்.... சரியாக கணித்துவிட்டீர்கள்பா....
ReplyDelete