"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Tuesday, August 16, 2011

வெஜிடபிள் பிரியாணி

வெஜிடபிள் பிரியாணி 

தேவை 

பச்சரிசி பாசுமதி அரிசிக்கு அளவு தண்ணீர் ஒன்றுக்கு ஒன்று (அப்ப குழையாது) 
வெங்காயம் 
தக்காளி 
கேரட், பீன்ஸ், பட்டாணி, காலிப்ளவர், குடமிளகாய். 
மஞ்சள் தூள் 
உப்பு 
எண்ணை 
தயிர் ஒரு கப் 
எழுமிச்சை ரசம் 

மிக்சியில் அரைக்க‌ 
1. இஞ்சி பூண்டு 
2. பச்சைமிளகாய், கொத்த‌ம‌ல்லி 
3.ப‌ட்டை, ல‌வ‌ங்க‌ம், சோம்பு, ஏல‌க்காய் (பொடி செய்துக்கொள்ள‌வும்) 
4. வெங்காயம் மிக்சியில் அடித்துக்கொள்ளவும் 

அரிசி சமைப்பதற்கு முன் 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். 

பெரிய பாத்திரம் வைத்து எண்ணை ஊற்றி பொடிகளை போட்டு வதக்கி பின் வெங்காயம் பேஸ்ட் வதக்கி பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் வதக்கி தக்காளி காய்கள் எல்லாம் வதக்கி ப‌ச்சை மிள‌காய் கொத்த‌ம‌ல்லி வ‌த‌க்கி உப்பு மஞ்சள் தூள் போட்டு வ‌த‌க்கி த‌ண்ணீர் ஊற்றி கொதித்த‌தும் அரிசி போட்டு, புதினா த‌ழைக‌ளை ந‌றுக்கி போட்டு எலுமிச்சை ர‌ச‌ம் ஊற்றி, த‌யிர் ஊற்றி பின் கொதி வ‌ந்த‌தும் த‌ட்டுப்போட்டு மூடி சிறு தீயில் வைத்து 20 நிமிட‌ங்க‌ள் க‌ழித்து திறந்து பாருங்க‌ள் பொல‌ பொல‌வென்று இருக்கும்....நன்றாக இருக்கும் சாப்பிட‌ (த‌ண்ணீரில் அரிசி போட்ட‌தும் கொதி வ‌ரும்போது த‌ண்ணி நிறைய‌ இருக்க‌கூடாது... த‌ண்ணியும் அரிசியும் ச‌ரி விகித‌மா இருக்க‌னும்) 

21 comments:

  1. எங்கள சைவமா இருக்கச் சொல்லுறீங்க....??? எவ்வளவோ செய்தனாங்க இந்த பிரியானியையும் செய்து பார்தா போச்சு.... வாழ்த்துக்கள் சகோதரி....

    காட்டான் குழ போட்டான்....

    ReplyDelete
  2. ஏன் சகோதரி திரட்டிகளில் இணைக்கவில்லை?????

    ReplyDelete
  3. ஐ வெஜிடபுள் பிரியாணி செய்து திண்ணுடவேண்டியதான்... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. பிரியாணி அருமை!....நானும் இன்றே சமைக்கத் தொடங்க வேண்டும் .நன்றி சகோதரி தங்களின் பகிர்வுக்கு .வாழ்த்துக்கள் .என் தளம் உங்கள் வரவுக்காகக் காத்திருக்கின்றது.
    உங்கள் வரவு நல்வரவாகட்டும்.....

    ReplyDelete
  5. அன்பு நன்றிகள் காட்டான் சகோதரரே... அடடா இதற்கு முன்னாடி மீன் பிரியாணி போட்டிருக்கேன் பார்க்கலையா நீங்க?

    மீன் பிரியாணி , கோதுமை ரவை கிச்சடி, வெஜிடபிள் பிரியாணி போட்டேன்...

    அது எப்படி திரட்டிகளில் இணைக்கனும்னு சொல்லி தாங்க சகோதரரே... அது என்னன்னு எனக்கு தெரியலையே....

    ReplyDelete
  6. அன்பு நன்றிகள் ரத்னவேல் ஐயா...

    உங்க வலைதளம் பார்த்தேன்... அருமையான விஷயங்கள் இருக்கு....

    இனி கண்டிப்பா படித்து கருத்திடுவேன்...

    ReplyDelete
  7. அன்பு நன்றிகள் விடிவெள்ளி....

    ReplyDelete
  8. அன்பு நன்றிகள் மாய உலகம் ராஜேஸ்...

    செய்து சாப்பிட்டு சொல்லுங்க....

    ReplyDelete
  9. அருமையான சுவையான "வெஜிடபிள் பிரியாணி"க்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  10. நாளை வெள்ளிக்கிழமை. சைவ உணவுகள் சமைப்பதற்கே நேரம் சரியாக இருக்கும். இந்த பிரியாணியை முயற்சித்துப் பார்ப்போமே. மஞ்சுபாஷிணி சுவைத்தபின்தானே எமக்குத் தந்திருப்பார். நன்றி

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. பிரியாணி பிடிக்கும் ஆனா
    உடல் நலம் தடுக்கும்
    அருமை!
    ப்லவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  13. அன்பு நன்றிகள் சே குமார்...

    ReplyDelete
  14. அன்பு நன்றிகள் அம்பாளடியாள், உங்கள் தளம் வந்து பார்த்தேன்... உங்கள் அன்பு மனதிலும் வலைதளத்திலும் இடம் கொடுத்ததற்கு என் அன்பு நன்றிகள்பா..

    அருமையான விஷயங்கள் உள்ளடக்கிய அருமையான தளம்பா....

    ReplyDelete
  15. அன்பு நன்றிகள் இராஜ ராஜேஸ்வரி கருத்து பதிந்தமைக்கு....

    ReplyDelete
  16. அன்பு வரவேற்புகள் சந்திரகௌரி.. ஆமாம்பா நான் சமைத்து எல்லோரும் ரசித்து ருசித்து அதை நானும் சாப்பிட்டப்பின்னரே தைரியமாக இட்ட பகிர்வு.. பயப்படாம ஜமாய்ங்க... நேத்து செய்தீர்களா எப்படி இருந்ததுன்னு சொல்லுங்கப்பா....

    அன்பு நன்றிகள் சந்திரகௌரி....

    ReplyDelete
  17. அடடா இராமானுசம் ஐயா உங்களுக்காக கோதுமை ரவை கிச்சடி போட்டிருந்தேனே... நீங்க பார்க்கலையே..

    அன்பு நன்றிகள் ஐயா...

    ReplyDelete
  18. சொல்லவே இல்லையே மறந்திட்டேன். super ஓ super

    ReplyDelete
  19. அட சந்திரகௌரி சமைத்தீர்களா?

    அப்டியே ஒரு பிளேட் குவைத்துக்கும் பார்சல் அனுப்பி இருக்கலாம் தானே?

    அடுத்த முறை அனுப்புங்கப்பா...

    அன்பு நன்றிகள் சந்திரகௌரி....

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...