"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Wednesday, August 10, 2011

பெண்ணாய் பிறந்திட மாதவம்.....

பெண்ணாய் பிறந்திட மாதவம்....

விதி என்று சொல்லியே
கதை முடிக்க கண்டேன்

மதி கொண்டு நானும்
தடுத்திட முயன்றேன்

பதி என்னவன் உதவியோடு
கள்ளிப்பால் புகட்ட

சதி ஒன்று நடந்திட
அழுகையோடு கிடந்தேன்

என் உயிர்ப்பூ உலகை
கண்விழித்து பார்க்காது

பெண்ணாய் சாதிக்க
இயலாத விரக்தியில்

ஆழ்ந்த உறக்கத்தில்
நிரந்தரமாக.....

10 comments:

 1. கருப்பை உலகை விட்டு வெளியே வரவே
  இத்தனைப் போராட்டங்களை சந்திப்பதனால்தான்
  பெண்கள் வாழ்க்கைப் போராட்டம் குறித்து
  ஆண்களைப் போல் அதிகம் அஞ்சுவதில்லையோ
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. இறுதி வரிகள் மனதை நெகிழ வைக்கிறது....
  அருமையான கவிதை...
  வாழ்த்துக்கள் அக்கா..

  ReplyDelete
 3. எத்தனைக்கோடி உயிரணுக்களை வெற்றிக்கண்டு வெளியே வந்த உயிர் பெண்ணானால கள்ளிப்பாலா....வெற்றிக்கண்டவளுக்கு அறியாமை தந்த தோல்வி... மனதை வருடும் கவிதை....

  ReplyDelete
 4. நல்ல கவிதை.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. பெண் சிசுக்கொலைபற்றிய கவிதை.. பாழ்பட்ட நெஞ்சுடையோருக்கு பாடம் புகட்டும் விதமாக எழுந்த அருமையான கவிதைக்கு பாராட்டுகள் மஞ்சு..!

  ReplyDelete
 6. கரெக்டா சொன்னீங்க ரமணி சார்....

  அன்பு நன்றிகள் ரமணி சார் கருத்து பதிந்தமைக்கு...

  ReplyDelete
 7. அன்பு நன்றிகள் விடிவெள்ளி கருத்து பதிந்தமைக்கு....

  ReplyDelete
 8. அன்பு நன்றிகள் மாய உலகம் ராஜேஸ் கருத்து பதிந்தமைக்கு....

  ReplyDelete
 9. அன்பு நன்றிகள் ரத்னவேலு ஐயா கருத்து பதிந்தமைக்கு...

  ReplyDelete
 10. மிக்க மகிழ்ச்சி கலை கருத்து பதிந்தமைக்கு...

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...