"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, August 6, 2011

செல்லக்கூடல்....


அன்பு குறைய ஆரம்பித்தால்
குறைகள் கண்ணுக்கு தெரியுமாம்

குறைகள் தெரிய வந்துவிட்டால்
அன்பில் விரிசல் தொடங்குமாம்

இயல்பான வார்த்தைகள் வெளிவந்தால்
குற்றம் சாட்டுவது போல் அமையுமாம்

இன்பமாய் கழிந்த பொழுதுகள் எல்லாம்
நரகவேதனையாய் நகர்ந்து முடியுமாம்

பொறுமைக்காத்து வேண்டி நின்றால்
தவறை உணர்ந்து தத்தளித்து நிற்குமாம்

விட்டுப்பிரியும் கொடுமையை எண்ணினால்
ஊடல் வேண்டாம் செல்லக்கூடல் வேண்டுமென்று சொல்லுமாம்.....

2 comments:

  1. அன்பு குறைய அனுமதி மறுப்போம்... அருமையான கவிதை

    ReplyDelete
  2. அன்பின் மஞ்சு

    தாம்பத்யத்தில் இவை எல்லாம் தவிர்க்க இயலாதவை - இறுதியில் ”விட்டுப்பிரியும் கொடுமையை எண்ணி
    ஊடல் வேண்டாம் செல்லக்கூடல் வேண்டுமென்று சொல்லுமாம்.....”. நல்ல சிந்த்னை - நல்வாழ்த்துகள் மஞ்சு - நட்புடன் சீனா

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...