"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Tuesday, August 16, 2011

மீன் பிரியாணி

மீன் பிரியாணி
மீன் பிரியாணி 

தேவை 

வஞ்சிர மீன் துண்டுகள் 
அரிசி 
வெங்காயம் 
தக்காளி 
இஞ்சி 
பூண்டு 
எலுமிச்சை பழம் 
மஞ்சள் தூள் 
பச்சை மிளகாய் 
உப்பு 
கறிவேப்பிலை 
மிளகாய் தூள் 
எண்ணை 

செய்முறை 

வஞ்சிர மீன் துண்டுகளை கழுவி அதில் கொஞ்சம் மஞ்சள் தூள், கொஞ்சம் உப்பு, மிளகாய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், எலுமிச்சை ரசம் கலந்து அரை மணி நேரம் ஊற வைத்து எண்ணையில் பொறித்து வைக்கவும் (டீப் ஃப்ரை அல்ல) 

அரிசியை கழுவி ஊறவைக்கவும் 15 நிமிடங்கள். குக்கரில் குக்கர் இல்லாதவர் பெரிய பாத்திரத்டை அடுப்பில் வைத்து எண்ணை ஊற்றி வெங்காயம் நறுக்கி போட்டு வதக்கி இஞ்சி பூண்டு விழுது , தக்காளி, பச்சை மிளகாய் , கறிவேப்பிலை போட்டு நன்றாக வதக்கி மஞ்சள் தூள், உப்பு கலந்து வதக்கி, வறுத்த மீன்களை போட்டு வதக்கி அளவான நீர் ஊற்றி கொத்தித்தும் அரிசி நீர் களைந்து இட்டு கொதித்ததும் அடுப்பை சிறிதாக வைத்து எலுமிச்சை ரசமிட்டு கலந்து சரியான தட்டு போட்டு மூடி அரிசி வேகும்வரை அடுப்பை சிறிதாக வைக்கவும், பின்னர் திறந்து கலந்து மறுபடியும் மூடி வைக்கவும். சாப்பிட மிக ருசியாக இருக்கும்.

2 comments:

  1. ஆஹா ஃபிஸ் பிரியாணி இதுக்கு தான் என் ஓட்டு...செஞ்சி சாப்பிடனும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அன்பு நன்றிகள் மாய உலகம் ராஜேஸ்....

    செய்து சாப்பிட்டு சொல்லுங்க....

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...