"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Sunday, August 7, 2011

புளிச்சக்கீரை ஊறுக்காய்

தேவை:

புளிச்சக்கீரை ‍ 2 கட்டு
கீரையை ஆய்ந்து அல‌சி வெறும் வாண‌லியில் வ‌த‌க்க‌வும், ந‌ன்றாக‌ வ‌த‌க்கும்போதே ஜாம்
போல‌ ஆகிவிடும். அதை இறக்கி வைத்துவிட்டு 20 ப‌ல்லுப்பூண்டு ந‌சுக்கி வைத்துக்கொள்ள‌வும்.


வறுத்து பொடி செய்ய‌

பெருங்காயம்
எள்ளு
முழு தனியா
சிகப்பு மிளகாய் வற்றல்
சீரகம்
வெந்தயம்
கடுகு

இதையெல்லாம் வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்து வைக்கவும்


வாண‌லி வைத்து ந‌ல்லெண்ணையை ஊற்றி காய்ந்த‌தும் ந‌சுக்கி வைத்து பூண்டை
எண்ணையில் போட்டு உட‌னே ஸ்ட‌வ்வை அணைத்து விட‌வேண்டும். பின்
வாண‌லியை கீழே இற‌க்கி வைத்து விட்டு அதில் வ‌த‌க்கிய‌ கீரையை போட்டு க‌ல‌க்க‌வும்
அதில் மிள‌காய் தூள் போட்டு ந‌ன்றாக‌ க‌ல‌க்க‌வும், பின்ன‌ர் வ‌றுத்த‌ ம‌ற்ற‌
பொடிக‌ளையும் க‌ல‌க்க‌வும்.க‌டைசியில் போதுமான‌ அள‌வு உப்பு சேர்த்து க‌ல‌க்க‌வும்...
ந‌ன்றாக‌ க‌ல‌ந்து ஆற வைத்து பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ள‌வும்...
அப்புற‌ம் எல்லாத்துக்கும் புளிச்ச‌க்கீரை ஊறுக்காயை தொட்டு சாப்பிட‌லாம்..


10 comments:

 1. ஆஹா எளிமையாக சொல்லியுள்ளீர்கள்.. நாங்கள் கூட செய்யலாம்போல அருமை

  ReplyDelete
 2. ஒரு கணம் வேறு வலைப்பக்கம் வந்து விட்டேனோ என்ற சந்தேகம்.
  இரண்டு நாட்களில் இத்தனை பதிவுகளா?
  எப்படிங்க?
  உங்க வேகத்துக்கு என்னால ஈடு கொடுத்து பின் தொடர முடியலடா சாமி.

  ReplyDelete
 3. அன்பு நன்றிகள் மாய உலகம் ராஜேஸ்... தாராளமாக செய்யலாம் எளிது கூட...

  ReplyDelete
 4. அன்பு நன்றிகள் சிவகுமாரன்....

  தோள்பட்டை வலி அதிகம்... ஆபிசில் வேலை அதிகம் அதனுடன் மனச்சோர்வு முடக்கிவிட்டது... இல்லைன்னா இன்னும் அதிக பதிவுகள் இட்டிருக்கலாம்...

  ReplyDelete
 5. ஆமாம் மாய உலகம் ராஜேஸ்... கத்துக்கிட்டு செய்ய ஆரம்பிங்க சமையல் அதை பகிருங்க பதிவில்...

  அன்பு நன்றிகள் ராஜேஸ்..

  ReplyDelete
 6. ஆஹா உங்களைப்போல தமிழ் அத்தனை தூய்மையா இலக்கணம் எல்லாம் தெரியாது... ஏதோ தெரிந்ததை எழுதுகிறேன்பா.....

  அன்பு நன்றிகள் சிவகுமாரன்...

  ReplyDelete
 7. நலன் விசாரித்தமைக்கு அன்பு நன்றிகள் சிவகுமாரன்... எனக்கு இருப்பது சர்விகல் ஸ்பாண்டிலைஸ் என்பதால் வலது தோள்பட்டை எப்போதும் வலித்துக்கொண்டே இருக்கும்... 2000 ஆம் ஆண்டு கை முட்டியில் வலி ஆரம்பித்தபோது டாக்டரிடம் போனோம். இனி வலது கையில் அதிக வேலை செய்ய கூடாது அதிகம்னு சொன்னாங்க அதன்பின் தான் இங்கே அதிகம் வேலை இருக்குமிடத்தில் வேலைக்கு சேர்ந்தேன். இன்று வரை ஓய்வில்லை...மனதில் இருக்கும் சுறுசுறுப்பு கைகளுக்கு வர சிரமமாகிறது.... மாத்திரமல்ல வலியுடனே நாட்களை கடத்த பழகிக்கொண்டதால் அப்படியே போகிறது..... வலி அதிகமானால் கஷ்டமாக இருக்கிறது. வலி இப்பவும் உள்ளது தான்பா.... வலியுடனே வாழ பழகிவிட்டது ரொம்ப உதவுகிறது...

  ReplyDelete
 8. புளிச்சக்கீரை ஊறுகாய் அனைவரும் பயன்படுத்தவேண்டியது ! கலப்படப் பொருள்களால் அவதிப்படும் மக்களுக்கு இத்தகைய இயற்கை உணவுகளே தேவை !-
  Dr.S.Soundarapandian
  M.A.(Tamil), M.A.(English), B.Ed.,Dip.(Sanskrit) ,Ph.D
  Chennai - 33

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...