"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, August 20, 2011

ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு?

ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு?

என் கோபம் பொறுத்தாய்
சிறுபிள்ளைத்தனம் என்றே மன்னித்தாய்

என் கண்ணீர் சுவைத்தாய்
துன்பங்களை எல்லாம் மறக்கவைத்தாய்

என் சோகம் சுமந்தாய்
தோளில் சாய்த்து ஆறுதல் சொன்னாய்

என்மேல் இத்தனை அன்பு ஏனடா என்றேன்
மனம்கொள்ளா காதலடி முத்தமிட்டு சொன்னாய்

என் காதலில் உயிர்த்தாய்
உன்மேல் கொண்ட என்காதலை வெளிக்கொணர்ந்தாய்

என் முத்தத்தில் உலகம் மறந்தாய்
அதையே பகிர்ந்து சுவையுணர்த்தினாய்

என் புன்னகையில் மகிழ்ந்தாய்
உயிரே உனக்காய் வாழ்வேன் என்றாய்

என் மகிழ்ச்சியில் மலர்ந்தாய்
அதுவே உன் கடமையென பாடுபட்டாய்

என் மூச்சினில் கலந்தாய்
என்னையும் ஏற்றுக்கொண்டாய்

எனக்கே குழந்தையானாய்
தாயாய் என்னை அரவணைத்தாய்

என் உடனே மரிப்பேன் என்றாய்

மீண்டும் பிறந்தால் உனக்காகவே என்றாய்


அன்று பிரிவேன் என்ற சொல்லுக்கு மரணித்தாய்


இன்று என்னை தனியாக்கிவிட்டு 
மரணத்தையே உனக்கு துணையாக்கிக்கொண்டு மறைந்தாயே !!!

27 comments:

 1. ஆஹா இதுவல்லவா..உயிர் காதல். காதல் கவிதை கலக்குது போங்க...வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. இது கவிதை

  வாழ்த்துக்கள் மஞ்சுபாஷிணி

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள் சகோதரி அருமையான காதல் கவிதை படைத்தீர்கள்... திரட்டிகளில் இணைத்தீர்களானால் அதிகமானவர்களை சென்றடையுமே உங்கள் ஆக்கங்கள்...

  காட்டான் குழ போட்டான்...

  ReplyDelete
 4. அன்பு நன்றிகள் கருத்து பதிந்தமைக்கு மாய உலகம் ராஜேஸ்..

  ReplyDelete
 5. அன்பு நன்றிகள் சரவணன் கருத்து பதிந்தமைக்கு...

  ReplyDelete
 6. அன்பு நன்றிகள் காட்டான் சகோதரரே.. என் நண்பரிடம் கேட்டேன். அவர் சொல்லித்தரேன்னு சொல்லி இருக்கிறார். இணைத்துவிடுகிறேன்பா....

  ReplyDelete
 7. மிக மிக அருமை
  மீண்டும் மீண்டும் அன்பின் ஆழத்தைச்
  சொல்லிச் செல்ல பிரமிப்பு ஏற்படுகிறது
  அற்புதமான சொல்லாட்சி
  கவிதையின் முடிவினை மட்டும்
  தட்டையாக முடிக்காமல்
  கொஞ்சம் உயர்த்திச் சொல்லி முடித்தால்
  இன்னும் சிறப்பாக இருக்குமோ எனத் தோன்றுகிறது
  தரமான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. ‘ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு?என் கோபம் பொறுத்தாய்சிறுபிள்ளைத்தனம் என்றே மன்னித்தாய்என் கண்ணீர் சுவைத்தாய்துன்பங்களை எல்லாம் மறக்கவைத்தாய்என் சோகம் சுமந்தாய்தோளில் சாய்த்து ஆறுதல் சொன்னாய்என்மேல் இத்தனை அன்பு ஏனடா என்றேன்மனம்கொள்ளா காதலடி முத்தமிட்டு சொன்னாய்//

  நேசம் நிறைந்து ததும்பும் அருமையான வரிகள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. கவிதை வரிகள் மிகவும் அருமை!நேரம் இருந்தால் என் வலைப்பக்கம் வந்து போங்கள்!நானும் குவைத்தில் தான் இருக்கிறேன்!

  ReplyDelete
 10. என் காதலில் உயிர்த்தாய்
  உன்மேல் கொண்ட என்காதலை வெளிக்கொணர்ந்தாய்

  ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு..

  தலைப்பும் உள்ளடக்கமும் ஜீவன் ததும்பி வழியும் வரிகள்.

  ReplyDelete
 11. காதலை சிறப்பாக படம் பிடித்து கட்டியுள்ளீர் சிறப்பனவரிகள் உண்மையான காதல் இப்படியாக அடையலாம் கொள்ளட்டும் பாராட்டுகள் தொடர்க ...........

  ReplyDelete
 12. அழகழகான கவிதை அக்கா...
  வாழ்த்துக்கள்.
  என்றும் அன்புடன்..

  ReplyDelete
 13. அன்பின் ஆழத்தைச் சொல்லச் சொல்ல கண்கள் கலங்கியது .
  அத்தனை தத்துருவமாய் உண்மைக் காதலின் உணர்வை
  வெளிக்காட்டிய கவிதை அருமையிலும் அருமை!....இறுதி
  வரியில் சற்றுத் தளம்பிவிட்டேன் .வாழ்த்துக்கள் சகோதரி
  மிக்க நன்றி பகிர்வுக்கு .இன்று ஒரு நகைச்சுவை வந்து சிரியுங்கள்....

  ReplyDelete
 14. கதையும் வருகிறது
  கவிதையும் வருகிறது
  எதையும் சுவைபட
  எழுத வருகிறது
  வலையில் வருகிறது
  வளமிகு சமையல்
  கலையும் வருகிறது
  வாழ்கவே! நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 15. கவிதை ரொம்ப அருமையா இருக்கு. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 16. kadhalin azhathai unara arambitha enakku adhai unarthia nee ean ithanai uyiranai?anbu sagodharikku alavu kadandha mariyadhaiyudan namaskarangal..........nirmala.

  ReplyDelete
 17. அன்பு நன்றிகள் ரமணி சார்... கடைசி வரி நச்னு முடிக்கும்படி தெரியலை ரமணி சார் அதான்.....

  அடுத்த கவிதை நச்னு இறுதி வரை எழுத முயற்சிக்கிறேன் ரமணி சார்....

  ReplyDelete
 18. அன்பு நன்றிகள் இராஜராஜேஸ்வரி கருத்து பதிந்தமைக்கு....

  ReplyDelete
 19. அன்பு வரவேற்புகள் ஸ்ரீதர்....

  உங்க வலைத்தளம் பார்த்தேன்....

  கற்பதற்கு அருமையான விஷயங்கள் இருக்கிறது....

  நீங்க குவைத் தானா? சந்தோஷம் ஸ்ரீதர்...

  அன்பு நன்றிகள் கருத்து பதிந்தமைக்கு...

  ReplyDelete
 20. அன்பு நன்றிகள் ரிஷபன் கருத்து பதிந்தமைக்கு...

  ReplyDelete
 21. வாங்க மாலதி....

  ஹாஸ்டல் படிப்பு எல்லாமே எப்படி இருக்கிறதுப்பா?

  அன்பு நன்றிகள் மாலதி கருத்து பதிந்தமைக்கு....

  ReplyDelete
 22. அன்பு நன்றிகள் விடிவெள்ளி கருத்து பதிந்தமைக்கு...

  நீங்க சொன்னது போலவே ஒரு படைப்பு தான் போடுகிறேன்....

  ReplyDelete
 23. அன்பு நன்றிகள் ராமானுசம் ஐயா கவிதையாய் கருத்து பதிந்தமைக்கு.....

  ReplyDelete
 24. அன்பு நன்றிகள் சே குமார் கருத்து பதிந்தமைக்கு....

  ReplyDelete
 25. நிர்மலா இத்தனை மரியாதையுடன் நீ பேசுவது பார்த்து எனக்கு மயக்கமே வரமாதிரி ஆகிருச்சுடி....நிஜம்ம்ம்ம்ம்மா இது என் தங்கை நிர்மலாவா? இரும்மா கண்ணு அக்டோபர் 13 வருவேன் சென்னைக்கு.... வந்து இருக்கு உனக்கு அடி உதை கச்சேரி :)

  ReplyDelete
 26. இந்தக் கவிதையில் கூட கடைசி வரியை
  மாறுதலாக "நான் என்றால் அத்தனை உயிரா உனக்கு"
  என திருப்பி அடித்திருந்தால் கவிதையின்முடிவில்
  கொஞ்சம் சுவாரஸ்யம் கூடியிருக்கும் என நினைக்கிறேன்
  எப்போதும் கடைசி பத்தி கடைசி வரி இவைகளில்
  இதுபோல் கொஞ்சம் அழுத்தம் கொடுத்தால்தான்
  படிப்பவர்களுக்கு படித்து முடிக்கையில் ஒரு
  திருப்தி ஏற்படும் என்பது என் அனுபவம்

  ReplyDelete
 27. கண்டிப்பாக ரமணி சார்... நீங்க சொல்வது உண்மையே....

  இப்ப கடைசி வரி போட்டிருக்கேன் ரமணி சார்.....

  எப்பவுமே கவிதையின் கடைசி வரி நச் நு இருக்கனும்..

  அன்பு நன்றிகள் ரமணி சார்...

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...