"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Thursday, August 4, 2011

இருப்பேனா?? இறப்பேனா??

குழப்பங்கள் வேதனைகள்
மனதை பிசைந்துக்கொண்டிருக்க
முதல் சுருக்.....


இறுக்க இதயம் பிழிந்தது போல்.....
மறுபடியுமா என்ற ஆயாசம்
கொஞ்சம் பொறுப்போமே


காலைமுதல் மாலைவரை
மன அழுத்தங்களால் 
சூழ்ந்த மனதை
ஒட்டு பருக்கையும்
மறுத்த வயிறு......


மனம் எரிந்து போனதால்
வயிறும் காய்ந்துக்கொண்டிருக்க
இரண்டாவது சுருக்......


அவ்வளவு தானா.....
உலகத்துடன் தொடர்பு?
மரணித்தாலும் வலியோடு வேண்டாமே


மனம் வேண்ட ஆரம்பித்தது
மரணம் என்னை அசைக்கிறது
பயம் சற்று தருகிறது


மரணத்தின் பின் என்ன செய்வேன்?
எங்கே போவேன்?
பாவங்களின் குழியிலா?
சொர்கத்தின் வாசலிலா?


இன்னொரு பிறவி எடுத்தாகவேண்டுமா?
மூன்றாவது சுருக்.....


வலியின் கொடுமை தாளவில்லை
படுக்கவோ இருக்கவோ
முடியாத நிலை


அமைதியாய் இறைவனை
வேண்டிக்கொண்டு
மரணத்தை எதிர்ப்பார்த்து
மனதில் கேள்வி முளைத்தது
இருப்பேனா? இறப்பேனா?

7 comments:

 1. நல்ல கவிதை.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. //மரணத்தின் பின் என்ன செய்வேன்?
  எங்கே போவேன்?
  பாவங்களின் குழியிலா?
  சொர்கத்தின் வாசலிலா?
  இன்னொரு பிறவி எடுத்தாகவேண்டுமா?//

  வேதனையின் உச்சம் - கவிதை கலக்கல்

  ReplyDelete
 3. இருப்பேனா? இறப்பேனா?//

  To be or Not to be ...????

  ReplyDelete
 4. அன்பு நன்றிகள் ரத்னவேலு ஐயா கருத்து பதிந்தமைக்கு.

  ReplyDelete
 5. அன்பு நன்றிகள் மாய உலகம் ராஜேஸ் கருத்து பதிந்தமைக்கு.

  ReplyDelete
 6. அன்பு நன்றிகள் ராஜராஜேஸ்வரி கருத்து பதிந்தமைக்கு.... அதே அதேப்பா..

  ReplyDelete
 7. என் மனம் கவர்ந்த இந்தப் பதிவை நாளைய (6/11/11 -ஞாயிறுக்கிழமை) காலை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தவிருக்கிறேன். நேரம் கிட்டும்போது வந்து பாருங்கள். http://blogintamil.blogspot.com

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...