"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, August 6, 2011

நீ.....

உன் மேல் எனக்கு காதலென்று.....

தினம் தினம் நீ
திட்டினாலும் என்னருகே நீ
திகட்ட திகட்ட பேசினாலும் நீ
தித்திக்கும் உன் சொல்லிலும் நீ
திக்குமுக்காட வைப்பதும் நீ.....

வெற்றியின் வழியில் நீ
வெம்மையில் குளிர்ச்சாரலாய் நீ
வெள்ளை மன புன்னகை நீ
வெண் தாமரை அணைப்பும் நீ
வெகுளி குழந்தையாய் என் விரல் பிடிக்கும் நீ

மன்னிக்கும் பக்குவத்தில் நீ
மனம்கொள்ளா காதலுடன் நீ
மறுப்பில்லா நேசமுடன் நீ
மறைக்காத பண்புள்ளவன் நீ
மகிழ்ச்சியை எனக்கு உணரவைத்ததும் நீ

காதினில் கிசுகிசுக்கும் மூன்றெழுத்தாய் நீ
காற்றினில் உன் அருகாமை உணர்த்திய நீ
காத்து அணைத்திட கைக்கோர்ததும் நீ
காலமெல்லாம் என்னை பொக்கிஷமாய் வைத்தது நீ
காதலை என்னுள் மலரச் செய்ததும் நீ.....

நீ என்னுள் இணைந்துவிட
தீயாய் என்னை தகித்துவிட
யாதுமாய் என்றும் ஆகிவிட
என்னை நானே மறந்துவிட
சின்னதொரு அணைப்பு தந்துவிடு
முத்தமிட்டு சொல்லிவிடு
உன்மேல் எனக்கு காதல் என்று.....

1 comment:

  1. இங்குமா? காதல் மழை நிற்காமல் பொழிந்துக்கொண்டே இருக்கிறதே... தீயாய் தகித்துவிட யாதுமாய் நிற்கும் காதல் .... கவிதை கலக்கல் பாராட்டுக்கள்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...