"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Tuesday, August 16, 2011

கோதுமை ரவை கிச்சடி

கொலஸ்ட்ரால், சர்க்கரை நோயாளிகளுக்கு ஸ்பெஷல் கோதுமை ரவை கிச்சடி... எல்லாருமே சாப்பிடலாம்... 

தேவை 

கோதுமை ரவை 
நறுக்கிய தக்காளி, பீன்ஸ், பட்டாணி 
வெங்காயம் 
இஞ்சி பூண்டு 
புதினா ஒரு கட்டு 
கொத்தமல்லி ஒரு கட்டு 
பட்டை 
லவங்கம் 
ஏலக்காய் 
சோம்பு 
ம‌ஞ்ச‌ள் தூள் 
எலுமிச்சை ர‌ச‌ம் 
எண்ணை 
உப்பு 

செய்முறை 

மிக்சியில் இஞ்சி, பூண்டு, ப‌ட்டை, ல‌வ‌ங்க‌ம், ஏல‌க்காய், புதினா, கொத்த‌ம‌ல்லி எல்லாம் ந‌சுக்கிக்கொண்டு குக்க‌ரில் ஆலிவ் ஆயில் இல்லையென்றால் ரீஃபைண்ட் ஆயில் ஊற்றி வெங்காய‌ம் ந‌றுக்கிய‌தை ந‌ன்றாக‌ வ‌த‌க்க‌வும், பொன்னிற‌ம் வ‌ந்த‌தும் மிக்சியில் அடித்த‌தை போட்டு வ‌த‌க்க‌வும், ந‌றுக்கிய‌ காய், த‌க்காளி, ப‌ட்டாணி போட்டு வ‌த‌க்க‌வும், ம‌ஞ்ச‌ள் தூள், உப்பு போட்டு வ‌த‌க்கி அள‌வான‌ நீர் ஊற்றி கொதித்த‌தும் கோதுமை ர‌வையை போட்டு க‌ல‌ந்து ஒரு க‌ப் த‌யிர் ஊற்றி க‌ல‌ந்து எலுமிச்சை ர‌ச‌ம் பிழிந்து க‌ல‌ந்து சிறு தீயில் வைத்து குக்க‌ர் மூடியால் மூடி 20 நிமிட‌ங்க‌ள் க‌ழித்து க‌ல‌ந்து வெங்காய‌ த‌யிர் ப‌ச்ச‌டியோடு சாப்பிட‌லாம், எல்லாரும் சாப்பிட‌லாம்..

5 comments:

  1. அருமையா சமைக்க சொல்லிட்டீங்க சிம்புளாகவும் இருக்கிறது வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அன்பு நன்றிகள் மாய உலகம் ராஜேஸ்....

    டயபடிக்காரர்களுக்கு இது ரொம்ப நல்ல உணவு...

    ReplyDelete
  3. இப் பதிவு எனக்குப் பயனுள்ளது
    நன்றி!


    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  4. அன்பு நன்றிகள் ஐயா...கருத்து பதிந்தமைக்கு...

    ReplyDelete
  5. சிரு சந்தேகம், எங்கெயோ படித்த நனைப்பு, ஆலிவ் ஆயிலை வதக்கவோ வருக்கவோ உபயோகிக்க கூடாது, சூடாக்காமல் உணவுடன் கலந்து உண்ணலாம்.
    சுவையான ரவை கிச்சடி .
    நன்றி.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...