"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Wednesday, August 10, 2011

தொலைதூரக்காதல்....

தொலைதூரக்காதல்.....

அன்றைய நாளின் சங்கமம்
நினைவில் நின்று தித்திக்கின்றது
நெஞ்சம் முழுக்க இனிமை
காதலில் மூழ்கி துளிர்க்கின்றது

பிரிவொன்று வந்திடாத காலமது
இணைந்தே செயல்பட்ட நேசமது
சொந்தமாய் நினைத்தே அணைத்து
பாசங்கள் பகிர்ந்து வசந்தம் வீசியது

விலகிடாத சொந்தங்கள் தொலைதூரத்தில்
ஏங்கிடும் மனங்களோ கண்ணீரில்
வாங்கிட விற்றிடும் பொருளில்லையே
காதலெனும் அற்புத பொக்கிஷம் இது

தொலைத்திட விரும்பாத நேசமென்பதால்
தொலை தூரத்தில் நின்றே காக்கின்றது
தொலையாத காதலாய் நெஞ்சத்திலிருத்திட
தொலைதூரக்காதலாய் கவிதை வடிக்கின்றது.....

10 comments:

 1. தொலைத்திட விரும்பாத நேசமென்பதால்
  தொலை தூரத்தில் நின்றே காக்கின்றது
  தொலையாத காதலாய் நெஞ்சத்திலிருத்திட
  தொலைதூரக்காதலாய் கவிதை வடிக்கின்றது.....

  உண்மைதான்..
  நல்லாயிருக்கு கவிதை..

  ReplyDelete
 2. தொலைதூரக்காதல் பார்ட்-2 வா... ஹா ஹா....தொலை தூரத்தில் இருந்தே காக்கின்றது தொலையாத காதலாய் - அற்புதமான வ்ரிகள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. வாங்கிட விற்றிடும் பொருளில்லையே
  காதலெனும் அற்புத பொக்கிஷம் இது

  அருமையான வரிகள்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. காதலின் அனைத்துப் பரிமாணங்களையும் எடுத்துரைக்கும் இதமான கவிதை.. உனது கவிதைகளை வாசிக்கும் போது நமக்கு அடுத்து இருந்து வாசித்துக் காண்பிக்கும் விதமாக இயல்பாக வந்து விழும் வார்த்தைகளைக் கொண்டு கருத்துக்கு மட்டுமே கவனம் செலுத்தி தீண்டுந்தோறும் நவில் நயம் அளிக்கும் நூலைப்போல அமைந்துள்ளது சிறப்பு மஞ்சு..! பாராட்டுகள்..!

  ReplyDelete
 5. அன்பு நன்றிகள் விடிவெள்ளி கருத்து பதிந்தமைக்கு....

  ReplyDelete
 6. அன்பு நன்றிகள் மாய உலகம் ராஜேஸ் கருத்து பதிந்தமைக்கு...

  ReplyDelete
 7. அன்பு நன்றிகள் ரத்னவேலு ஐயா கருத்து பதிந்தமைக்கு...

  ReplyDelete
 8. அட கலை என்ன இத்தனை சொல்றே... ஏதோ தோணுவதை எழுதுகிறேன்.. உன்னைப்போல் இலக்கணமும் வெண்பாவும் எனக்கு தெரியாதேப்பா....

  மிக்க மகிழ்ச்சி கலை கருத்து பதிந்தமைக்கு...

  ReplyDelete
 9. அன்புள்ள அக்கா,

  தொலைதூர காதல் இதயத்தை தொலைக்கிறது...

  வரிகளின் வழியே உணர்வுகள் அருமையாக வெளிபடுகிறது அக்கா...

  ReplyDelete
 10. அன்பு நன்றிகள் வாசா கருத்து பதிந்தமைக்கு...

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...