"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Thursday, August 4, 2011

தற்கொலை எதற்கும் தீர்வல்ல....

பிறவி எடுத்ததன் பயனை
வாழ்ந்து தீர்க்க வேண்டும்

பொறுப்பை உணர்ந்து கடமை
செய்து முடிக்க வேண்டும்

நம்பி இருப்போரை அனாதையாய்
பரிதவிக்க விட்டு

போவது நியாயமா 
இப்பூவுலகத்தை விட்டு?

கேட்பதெல்லாம் கிடைத்துவிட்டால்
தெய்வம் என்பது எதற்கு?

தோல்வியில் அனுபவங்களை
பாடமாய் பெற்று வெற்றிப்பெறு....

அண்ணாந்து பார்த்தது போதும்
ஆகாயத்தை வசப்படுத்த நினைத்தது போதும்

தோற்றவர் எத்தனையோ பேருண்டு
மனம் தளராது முயற்சிகளில் துவளாது
வெற்றியை நிலை நாட்டியதும் உண்டு.....

சிந்திக்க துவங்கு மனிதா
தற்கொலை தீர்வல்ல எதற்கும்....

10 comments:

  1. தோல்வியில் அனுபவங்களை
    பாடமாய் பெற்று வெற்றிப்பெறு....


    நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. அருமையான கவிதை அக்கா....
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  3. தோல்வியும் அவமானமும் அதனால் ஏற்படும் மன உளைச்சலும் தான் ஒரு மனிதனுக்கு அதிகமான தற்கொலை எண்ணங்கள் ஏற்படுகிறது.... இருப்பதில் அலாதி இன்பம் கண்டு போதும் என்கிற பக்குவத்தை வளர்த்துக்கொண்டு சமூகத்தை துட்சமாகப்பார்... தற்கொலை எண்ணம் தானாக விலகும்... உங்களது கவிதை தற்கொலை செய்ய நினைப்பவனுக்கும் தன்னம்பிக்கை ஊட்டி வாழவைக்கும் நன்றி

    ReplyDelete
  4. //அண்ணாந்து பார்த்தது போதும்ஆகாயத்தை வசப்படுத்த நினைத்தது போதும்//

    உண்மைங்க... ஜெயிக்க துடிக்க மட்டுமே நினைக்கும் மனது தோல்வியை ஏற்க மறுக்கிறது... அதனால் வாழ்வில் எவ்வளவோ வசந்தங்கள் இருக்கிறது அதை தேடுவோம்..என தற்கொலை எதற்க்கும் தீர்வல்ல என்பதை இலகுவான கவிதையில் அருமையாக அசத்தியுள்ளீர்கள்...வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. அன்பு நன்றிகள் ரத்னவேலு ஐயா கருத்து பதிந்தமைக்கு.

    ReplyDelete
  6. அன்பு நன்றிகள் மாலதி கருத்து பதிந்தமைக்கு...

    ReplyDelete
  7. அன்பு நன்றிகள் விடிவெள்ளி கருத்து பதிந்தமைக்கு...

    ReplyDelete
  8. அன்பு நன்றிகள் விடிவெள்ளி கருத்து பதிந்தமைக்கு...

    ReplyDelete
  9. அன்பு நன்றிகள் மாய உலகம் ராஜேஸ் விரிவான கருத்து பதிந்தமைக்கு.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...