சுகமாய் ஒரு மரணம் வேண்டும்
விண்ணப்பம் இறைவனை நோக்கி
விண்ணப்பம் இறைவனை நோக்கி
இன்னல்கள் என்னை கொன்றுவிட
தீராத நோய்கள் வதைத்துவிட
நீளும் பிரச்சனைகள் தொடர்ந்துவிட
மரணமே சுகமானது எனக்கு இப்போது
தப்பிக்க ஒரு வழி தேடி ஓடி
எங்கு ஓடியும் முடியாமல் நின்று
மரணத்தை எதிர்நோக்கி மூச்சை நிறுத்தி
இறைவா சுகமரணம் தந்துவிடு எனக்கு
பொல்லாங்கு பேசுவோரிடம் இருந்து காக்க
புகழ்ச்சியில் இருந்து என்னை மீட்க
வஞ்சகம் சூழ்ந்த வலையில் இருந்து தப்பிக்க
இறைவா சுகமரணம் தந்துவிடு எனக்கு
இறக்கும்போதும் வலி தெரியாதிருக்க
இறந்தப்பின்னும் பாரமாய் இல்லாதிருக்க
இயற்கை மரணம் சம்பவிக்க
இறைவா சுகமரணம் தந்துவிடு எனக்கு
இருந்து செய்த தர்மம் அனைத்தும்
இறந்தும் தொடர்ந்து செய்ய துடிக்க நானும்
உடலை அந்திமகாரியங்களுக்கு தராது
தானமாய் என்னுடலை தந்துவிட
இறைவா சுகமரணம் தந்துவிடு எனக்கு
இறைவனை நோக்கிய பார்வையில் இருந்து விலகாது
உடலும் உள்ளமும் அவன் பதக்கமலத்தில் சரணடைந்து
க்ருஷ்ணா க்ருஷ்ணா என்றுரக்க அழைத்துக்கொண்டே
உயிர்மூச்சு மெல்ல இறைவனோடு கலக்கவேண்டும்....
தீராத நோய்கள் வதைத்துவிட
நீளும் பிரச்சனைகள் தொடர்ந்துவிட
மரணமே சுகமானது எனக்கு இப்போது
தப்பிக்க ஒரு வழி தேடி ஓடி
எங்கு ஓடியும் முடியாமல் நின்று
மரணத்தை எதிர்நோக்கி மூச்சை நிறுத்தி
இறைவா சுகமரணம் தந்துவிடு எனக்கு
பொல்லாங்கு பேசுவோரிடம் இருந்து காக்க
புகழ்ச்சியில் இருந்து என்னை மீட்க
வஞ்சகம் சூழ்ந்த வலையில் இருந்து தப்பிக்க
இறைவா சுகமரணம் தந்துவிடு எனக்கு
இறக்கும்போதும் வலி தெரியாதிருக்க
இறந்தப்பின்னும் பாரமாய் இல்லாதிருக்க
இயற்கை மரணம் சம்பவிக்க
இறைவா சுகமரணம் தந்துவிடு எனக்கு
இருந்து செய்த தர்மம் அனைத்தும்
இறந்தும் தொடர்ந்து செய்ய துடிக்க நானும்
உடலை அந்திமகாரியங்களுக்கு தராது
தானமாய் என்னுடலை தந்துவிட
இறைவா சுகமரணம் தந்துவிடு எனக்கு
இறைவனை நோக்கிய பார்வையில் இருந்து விலகாது
உடலும் உள்ளமும் அவன் பதக்கமலத்தில் சரணடைந்து
க்ருஷ்ணா க்ருஷ்ணா என்றுரக்க அழைத்துக்கொண்டே
உயிர்மூச்சு மெல்ல இறைவனோடு கலக்கவேண்டும்....
Tweet |
பொல்லாங்கு பேசுவோரிடம் இருந்து காக்க
ReplyDeleteபுகழ்ச்சியில் இருந்து என்னை மீட்க
வஞ்சகம் சூழ்ந்த வலையில் இருந்து தப்பிக்க
இறைவா .............veri nice
"உடலை அந்திமக் காரியங்களுக்கு தாராது
ReplyDeleteதானமாக உடலைத் தந்து விட.....
இறந்தபின்னும் பிறருக்கு பயன்படவேண்டும் என
எண்ணுபவர்கள்தான் இவ்வுலகுக்கு நிறைய வேண்டும்
என்வே இறைவா இதுபோன்ற கோரிக்கைகளை
எப்போதும் நீ ஏற்காதே என
நானும் இறைவனுக்கு ஒருவேண்டுகோள் வைத்து
கவிதை எழுத நினைக்கிறேன்
(உங்களை இன்றைய வலைச் சரத்தில் அறிமுகம்
செய்துள்ளேன் கவனித்தீர்களா?)
நான் சபரிமலை குறித்து பதிவு ஏதும் போடவில்லை
ReplyDeleteவலைசர ஆசிரியர் பொறுப்பில் கடந்த
நான்கு நாட்களாக பதிவுகள்இட்டு வருகிறேன்
கொஞ்சம் பார்த்து தங்கள் கருத்தைப் பதிவிடவும்
ஐயையோ அக்கா என்ன மரணக்கவிதையில் விழுந்திட்டீங்க....
ReplyDeleteநல்ல சுப்பர் கவிதை...
மரணத்துக்கு கூட சுகமாய் போய்ச்சேரத்தான் எல்லோரது ஆசையும்...
அப்பிடியென்றால் மகிந்தவுக்கும் அப்பிடித்தான் இருக்கும்,,
அவரை எப்பிடி சுகமாய் சேர விடுறது...
hahahaha...
இயற்கை மரணம் சம்பவிக்க
ReplyDeleteஇறைவா சுகமரணம் தந்துவிடு எனக்கு/
விநாசையேன ஜீவிதம்
அநாசயேன மரணம்
என்று பெரியவர்கள் பிரார்த்திப்பார்கள்.
அதைக் கவிதையாய் அழகாய் வடித்திருக்கிறீர்கள்.
அன்பு நன்றிகள் மாலதி இங்கே தாங்கள் வருகை தந்தமைக்கும் கருத்து பதிந்தமைக்கும்....
ReplyDeleteஅன்பு நன்றிகள் ரமணி சார்.....
ReplyDeleteநல்லவர் எல்லோரும் சீக்கிரம் ஸ்வாமி கிட்ட போய்டறாங்க சார். அதான் ஸ்வாமி கிட்ட இப்படி ஒரு வேண்டுதல்....
வலைச்சரம்னா என்ன ரமணி சார்? எங்கே சென்று எப்படி பார்ப்பது தெரியவில்லையே?
வலை சர ஆசிரியர்னா? எங்க எழுதுறீங்க ரமணி சார் எனக்கு அந்த லிங்க் தாங்க வந்து கருத்து எழுதுகிறேன். எங்கன்னே தெரியலை ரமணி சார்...
ReplyDeleteஅன்பு நன்றிகள் விடிவெள்ளி....
ReplyDeleteநல்லவர் தீயவர் யாரையுமே மரணம் விட்டு வைப்பதில்லை.. ஆனால் இத்தனை உயிர்களை துடிக்க துடிக்க கதற வைத்து கொன்றவனை கடவுள் கண்டிப்பா தண்டிப்பார்பா....
அன்பு வரவேற்புகள் ராஜராஜேஸ்வரி....
ReplyDeleteஅன்பு நன்றிகள் வருகை தந்தமைக்கும் கருத்து பதிந்தமைக்கும்..
உண்மையே நீங்கள் சொன்ன வரிகள்பா...
கண்டுப்பிடிச்சிட்டேன் ரமணி சார்...
ReplyDeleteஉங்க தளத்துலயே வலைச்சரம்னு இருக்கு. அதில் உங்க பதிவும் கண்டேன்.
கண்டிப்பா கருத்தும் போடுகிறேன் சார்...
]சுகமாய் ஒரு மரணம் வேண்டும்
ReplyDeleteபொல்லாங்கு பேசுவோரிடம் இருந்து காக்கநீளும் பிரச்சனைகள் தொடர்ந்துவிடமரணமே சுகமானது இன்னல்கள் என்னை கொன்றுவிடதீராத நோய்கள் வதைத்துவிடநீளும் பிரச்சனைகள் தொடர்ந்துவிடமரணமே சுகமானது //
உண்மைதாங்க இந்த நரக்த்திலிருந்து விடுபட்டு சுகமான மனநிம்மதியுடன் கூடிய மரணம் இறைவன் இப்போதே தந்தாலும் அதனினும் பாக்கியம் வேறில்லை.... மனதை வருடிய பதிவு... வாழ்த்துக்கள்
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteஇருந்து செய்த தர்மம் அனைத்தும்
ReplyDeleteஇறந்தும் தொடர்ந்து செய்ய துடிக்க நானும்
உடலை அந்திமகாரியங்களுக்கு தராது
தானமாய் என்னுடலை தந்துவிட
இறைவா சுகமரணம் தந்துவிடு எனக்கு
அருமையான வரிகள்!
அதிலும்,தானமாக உடலை தர
வேண்டுவது என்பது தங்களின
பரந்து பட்ட உள்ளத்தைக் காட்டும்
உன்னத வரிகள்
வாழ்க!
புலவர் சா இராமாநுசம்
உருக்கமான வேண்டுகோள்!
ReplyDeleteஅன்பு நன்றிகள் மாய உலகம் ராஜேஸ் கருத்து பதிந்தமைக்கு....
ReplyDeleteஅன்பு நன்றிகள் ராமானுசம் ஐயா கருத்து பதிந்தமைக்கு...
ReplyDeleteஅன்பு வரவேற்புகள் நிஜாமுத்தீன்...
ReplyDeleteஅன்பு நன்றிகள் கருத்து பதிந்தமைக்கு
marana bayam poakka iraivanai noaki vinnappitha naan suga maranam thaa enakkettirukkalamo! manju! en karuthil vandha marumalarchi idhu. un kavidhai pookkalai kanngalil otri kollgiren.
ReplyDeleteஅன்பு நன்றிகள் நிர்மலா....
ReplyDelete