"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, August 6, 2011

நீயே வேண்டும்.... நீ மட்டுமே வேண்டும்....

நீயே வேண்டும்.....நீ மட்டுமே வேண்டும்...

உறக்கத்திலும் அணைத்துக்கொள்ள
நீ வேண்டும்

மன இறுக்கத்திலும் ஆறுதல் சொல்ல
நீ வேண்டும்

இரக்கத்திலும் என் மனம் நிறைக்க
நீ வேண்டும்

உருகும் உயிரிலும் உணர்வாய் கலக்க
நீ வேண்டும்

இன்பச்சுவையிலும் திகட்டாது இனிக்க
நீ வேண்டும்

துன்பச்சுமையிலும் சோர்ந்திடாது அருகே
நீ வேண்டும்

கவிதைவரிகளிலும் தமிழாய் சுவைத்திட
நீ வேண்டும்

இறுதிமூச்சிலும் உன்மடியில் சாய
நீ வேண்டும்.....

நீயே வேண்டும்... நீ மட்டுமே வேண்டும்.....

4 comments:

 1. நீயே வேண்டும் நீ மட்டுமே வேண்டும் கவிதை ஆஹா ஆயுளில் ஒருவரை மட்டும் மனதில் சுமக்கும் உண்மையான மன உணர்வு கவிதை .... கலக்கதுங்க...ஆஹா இங்கேயும் காதல் மழை பொழிகிறதே

  ReplyDelete
 2. வேண்டும் வேண்டும் என்றே- கவிதை
  வேண்டும் வேண்டும் ஒன்றே
  ஈண்டும் ஈண்டும் இன்றே-நீர்
  எழுதினீராம் நன்றே

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 3. அன்பு நன்றிகள் கருத்து பதிந்தமைக்கு மாய உலகம் ராஜேஸ்...

  உண்மையே ஆயுள் முழுக்க ஒருவரை மட்டுமே சுமக்கும் இறுதியில் உயிர் விடும்போதும் நேசித்த மனதின் மடியிலேயே முடியவேண்டும்....

  ReplyDelete
 4. அன்பு நன்றிகள் ராமானுசம் ஐயா கருத்து பதிந்தமைக்கு....

  கவிதை வரிகளிலேயே வாழ்த்து மிகவும் அருமை ஐயா...

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...