"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Sunday, August 7, 2011

தக்காளி ஊறுகாய்

தக்காளி ஊறுக்காய் 


தக்காளி ‍ 1 கிலோ 
பூண்டு 150 க்ராம் 
மஞ்சள் தூள் போதுமான அளவு 
மிளகாய் தூள் 
வெந்தயம் வறுத்து பொடி செய்தது 1 டேபிள்ஸ்பூன் 
பெருங்காயம் கொஞ்சம் 
உப்பு போதுமான அளவு 

செய்முறை 

நன்கு பழுத்த தக்காளிகளை நன்றாக கழுவி துடைத்து பூண்டும் தோல் உரித்து இரண்டும் மிக்சியில் போட்டு அரைத்து பெரிய தாம்பாளத்தில் ஊற்றி உப்பு கலந்து வெயிலில் 3 மணி நேரம் காயவைத்து (தண்ணி வற்றி ஜாம் மாதிரி ஆகிவிடும்) பின் வாணலி வைத்து இந்த கலவையை போட்டு ஸ்டவ்வில் வைத்து நன்றாக கிண்டவும், தொக்கு பதமாக வந்தப்பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், வெந்தய தூள், பெருங்காயத்தூள் எல்லாம் கலந்து இறக்கி வைத்து விட்டு, மற்ற வாணலியில் நல்லெண்ணை ஊற்றி கடுகு தாளித்து தக்காளி தொக்கில் போட்டு கலந்து வைத்து விடவும், இட்லி, சப்பாத்தி, தயிர் சாத்ததுக்கு தொட்டுக்க ஹப்பா சூப்பரா இருக்கும்..

16 comments:

  1. தக்காளி ஊறுகாய் அருமை

    ReplyDelete
  2. நாக்கில் எச்சில் ஊறுது.
    அதனால் தான் ஊறு..காய் என்று பெயரோ?

    ReplyDelete
  3. நாக்கில் எச்சில் ஊறுது.தக்காளி ஊறுகாய் அருமை

    ReplyDelete
  4. சுவையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  5. ஊறுகாயில இவ்வளவு எண்ணை இருக்கே அது என்னம்மா ஓமெகா3 எண்ணையாம்மா... ஏன்னா காட்டானுக்கு கொழுப்பு ஜாஸ்தின்னு வைத்தியர் சொல்லுறார்ங்கோ..

    காட்டான் குழ போட்டான்..

    ReplyDelete
  6. அன்பு நன்றிகள் மாய உலகம் ராஜேஸ்...

    ReplyDelete
  7. அன்பு நன்றிகள் பரிவை சே குமார்...

    ReplyDelete
  8. அன்பு நன்றிகள் சிவகுமார்.. ஊறுகாய் அதிகம் சாப்பிட்டால் வயிற்றுக்கு நலமல்லப்பா...

    ReplyDelete
  9. அன்பு நன்றிகள் மாலதி...

    உடனே செய்து சாப்பிட்டு சொல்லுங்கப்பா...சமைப்பீங்க தானே?

    ReplyDelete
  10. அன்பு நன்றிகள் ராஜராஜேஸ்வரி....

    ReplyDelete
  11. அன்பு நன்றிகள் சகோதரன் காட்டான்..

    நான் இந்த படம் கூகுளில் எடுக்கும்போதே நினைத்தேன்... ஐயோ யாராச்சும் எண்ணை அதிகமாருக்குன்னு சொல்வாங்களோன்னு... நீங்க சொல்லிட்டீங்க... நல்லெண்ணை உடலுக்கு நல்லதுன்னு நினைக்கிறேன்பா...

    ReplyDelete
  12. அருமையான ஊறுகாய் பார்க்கும்போதே

    எச்சில் ஊருகின்றதே சாப்பிட்டா எப்படி இருக்கும்..

    மிக்க நன்றி பகிர்வுக்கு.வாழ்த்துக்கள் மென்மேலும்

    சிறந்த ஆக்கங்கள் பொலிவுபெற....

    ReplyDelete
  13. அன்பு வரவேற்புகள் அம்பாளடியாள்...

    அன்பு நன்றிகள்பா.... செய்து சாப்பிட்டு சொல்லுங்கப்பா.. இன்னும் நிறைய ரெசிப்பி போடுகிறேன்...

    ReplyDelete
  14. \\\ஊறுகாய் அதிகம் சாப்பிட்டால் வயிற்றுக்கு நலமல்லப்பா...//

    அப்படியா ... காயத்திற்கு ஊறு விளைப்பதால் தான் ஊறுகாயோ ?
    ( ஊறு - துன்பம் , காயம் -உடல் )

    ReplyDelete
  15. அட சிவகுமாரன் அசத்துறீங்கப்பா சொல்லாடல் அருமை.....

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...