"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, August 13, 2011

பாவிகள் உலவும் உலகிலே....

பாவிகள் உலவும் இந்த உலகிலே....

பாவிகள் உலவும் இந்த உலகிலே
பெண்களின் கள்ளமில்லா வார்த்தையிலே
அன்பாய் உதிர்க்கும் ஓர்சொல்லும்
க‌யவ‌ர்க‌ள் ம‌ன‌தில் காதலை உசுப்பிவிடுமோ?

அறியாப் பருவத்தில் காதல் சொல்லி
காதலுக்கு பரிசாகக் கடிதங்கள் எழுதி
பெண்ணவள் மனதில் கள்ளம் புகுத்தி
இறுதியில் கண்ணீர் விடவைக்குமோ?

கனவுகள் உறக்கத்தை களவு கொள்ள‌
கற்பனைகள் மனதில் பூக்களைத் தூவ‌
அறிவு ஆற்றலை முழுதாய் மழுங்கடிக்க‌
காதலே தெய்வம் என்று சொல்லவைக்குமோ?

நம்பிக்கை கொண்ட பெற்றோருக்கு
ந‌ஞ்சாய் ப‌ர‌விடும் காத‌ல் ம‌ன‌தில்
துரோக‌ம் செய்ய‌ துணிந்திடும் வ‌ய‌து
இதுதான் காத‌ல் என்று சொல்ல‌ தோன்றுமோ?

14 comments:

 1. நம்பிக்கை கொண்ட பெற்றோருக்கு
  ந‌ஞ்சாய் ப‌ர‌விடும் காத‌ல் ம‌ன‌தில்
  துரோக‌ம் செய்ய‌ துணிந்திடும் வ‌ய‌து
  இதுதான் காத‌ல் என்று சொல்ல‌ தோன்றுமோ?//

  ஆதங்கம் நிறைந்த பகிர்வு.

  ReplyDelete
 2. ]பாவிகள் உலவும் இந்த உலகிலே....பாவிகள் உலவும் இந்த உலகிலேபெண்களின் கள்ளமில்லா வார்த்தையிலேஅன்பாய் உதிர்க்கும் ஓர்சொல்லும்க‌யவ‌ர்க‌ள் ம‌ன‌தில் காதலை உசுப்பிவிடுமோ?


  ஆணும்ஆணும் பெண்ணும் பெண்ணும்
  அன்பினைப் பறிமாறிக் கொள்ளுகையில்
  அதனை நட்பு எனக் கொள்கிறார்கள்
  அதுவே ஆணும் பெண்ணுமாகிப் போகையில்
  காதலென்று மயங்கி நிலை தடுமாறுகிறார்கள்
  யதார்த்தம் சொல்லும்
  அழகிய கவிதை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. //பெண்களின் கள்ளமில்லா வார்த்தையிலே
  அன்பாய் உதிர்க்கும் ஓர்சொல்லும்
  க‌யவ‌ர்க‌ள் ம‌ன‌தில் காதலை உசுப்பிவிடுமோ?//

  ஆண்களின் கள்ளமில்லா வார்த்தையிலே பண்பாய் உதிர்க்க்கும் பல சொல்லும் கள்ளிகள் மனதில் காதலை உசுப்பிவிடுமோ? ஹா ஹா ஹா

  ReplyDelete
 4. தலைப்பும் அருமை

  ReplyDelete
 5. உடனுக்குடன் பதிவிட்ட இராஜராஜேஸ்வரிக்கு என் அன்பு நன்றிகள்.....

  ReplyDelete
 6. அன்பு நன்றிகள் ரத்னவேல் ஐயா....

  ReplyDelete
 7. அட வித்தியாசமா யோசிச்சிருக்கீங்க ரமணி சார்....

  பொதுவான கருத்தா நச் நு சொல்லி இருக்கீங்க....

  உண்மையே....

  ஆணும் ஆணும் பெண்ணும் பெண்ணும் நட்பாய் அன்பாய் இருந்தால் தவறில்லை...

  அதுவே ஆணும் பெண்ணும் எனும்போது எழும் தூய நட்பு கொள்ள இடமில்லாதபடி காதல் மயக்கத்தில்...

  அருமையான சிந்தனை ரமணி சார்....

  பின்னூட்டத்தில் ஒரு ஆரோக்கியமான கருத்தை சொல்லி இருக்கீங்க...

  என் அடுத்த கதைக்கு கரு கிடைச்சிருச்சே... :)

  ரெண்டு அன்பு நன்றிகள் ரமணி சார்....

  ReplyDelete
 8. நற்பையும் காதலையும் பிரித்து பார்க தெரியாத ஜென்மங்களால் வந்த கவிதை..!!!???

  காட்டான் குழ போட்டான்..

  ReplyDelete
 9. மோமோ? என்றே ஒருகேள்வி காதல்
  மேவியோர் தமக்கு இக்கேள்வி
  ஆமோ என்றே அருங்கவிதை-ஆக்கி
  அளித்திட கண்டேன் நானுமதை
  தேமே என்று இல்லாமல்-கருத்து
  தெரிவித்தேன் இங்கே அல்லாமல்
  யாமென் தவறும் செய்தோமா-நீரும்
  ஏனோ வலைவழி வரவில்லை

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 10. அடடா பெண்களின் பக்கமிருந்து சிந்தித்து எழுதியதால் இப்படி எழுதிவிட்டேன். அதற்கு மிக்க வருந்துகிறேன் ராஜேஸ்.. தாங்கள் சொன்னதும் சரியே...

  அன்பு நன்றிகள் ராஜேஸ் மாய உலகம்..

  ReplyDelete
 11. அன்பு நன்றிகள் காட்டான் சகோதரரே கருத்து பதிந்தமைக்கு..

  ReplyDelete
 12. அன்பு வணக்கங்கள் ராமானுசம் ஐயா...

  நேற்று தான் அம்மா குழந்தை இந்தியாவில் இருந்து வந்ததால் கொஞ்சம் பிசியாகிவிட்டேன்... இன்று கண்டிப்பாக வந்து கருத்து இடுவேன்....

  அன்பு நன்றிகள் இராமானுசம் ஐயா கவிதையான பின்னூட்டத்திற்கு..

  ReplyDelete
 13. அன்பின் இராமானுசம் ஐயா,

  நீங்க பிழை செய்பவரா? அடடா நான் சமயம் இல்லாததால் வரமுடியாமல் போய்விட்டதே தவிர கவிதை தேர்த்தலோ தேர்த்தல் வாசித்தேன்.. ஏனோ தானோ என்று கருத்திட எனக்கு என்றுமே விருப்பமில்லை. அதான்... இன்று கண்டிப்பாக கருத்திடுவேன்...

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...