"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, August 6, 2011

இறுதி மூச்சிலும் அவள் பெயரை.....

இறுதி மூச்சிலும் அவள் பெயரை...

உயிராய் உருகிவிட்டு
அன்பாய் பழகிவிட்டு
உணர்வுகளில் ஒன்றிவிட்டு

சட்டென உதறத்தோன்றும்
யாருக்கும்
காதலைக்கொல்வதில்
பெரிய சிரமம் ஒன்றுமில்லை

கடுஞ்சொற்களாலும் 
கொல்லும் பார்வையாலும்
சிதைத்தீ மூட்டிவிட்டு
மனதை சிதையவைத்தால்போதும்

காதலோடு சேர்ந்து 
தானும் இறப்பான் 
உயிர்க்கும் அவள் நினைவுகளை 
மனதில் சுமந்துக்கொண்டு
காதலைக்கண்களில் தேக்கிக்கொண்டு

இறுதிமூச்சிலும் அவள் பெயரை
உச்சரித்துக்கொண்டு........

22 comments:

 1. //மனதில் சுமந்துக்கொண்டுகாதலைக்கண்களில் தேக்கிக்கொண்டுஇறுதிமூச்சிலும் அவள் பெயரைஉச்சரித்துக்கொண்டு........//

  ஆஹா இதுவல்லவா உயிரினும் மேலான காதல்... அருமையான கவிதை ...சூப்பர்... காதல் மழை பொழிகிறதே

  ReplyDelete
 2. நல்ல கவிதை.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. சட்டென உதறத்தோன்றும்
  யாருக்கும்
  காதலைக்கொல்வதில்
  பெரிய சிரமம் ஒன்றுமில்லை/


  ஆகா அற்புதமான வரிகள்...
  அழகான உண்மைகள் நிறைந்த கவிதை அக்கா...
  அன்புடன் வாழ்த்துக்கள்.....

  ReplyDelete
 4. காதலோடு சேர்ந்து
  தானும் இறப்பான்
  உயிர்க்கும் அவள் நினைவுகளை
  மனதில் சுமந்துக்கொண்டு
  காதலைக்கண்களில் தேக்கிக்கொண்டு//
  காதல் மழை

  ReplyDelete
 5. அருமையான கவிதை. நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. ''..சட்டென உதறத்தோன்றும்
  யாருக்கும்
  காதலைக்கொல்வதில்
  பெரிய சிரமம் ஒன்றுமில்லை..''
  உண்மை உணர்வுகளை நன்றாகக் கூறியுள்ளீர்கள்பா....வாழ்த்துகள்...
  வேதா. இலங்காதிலகம்.
  http://www.kovaikkavi.wordpress.com

  ReplyDelete
 7. காதலித்த இருவரில் ஒருவர்
  ஏமாற்றினாலும் மற்றவர் நிலை
  இதுதான் என்பதை அழகாக
  சொல்லும் கவிதை
  நன்று நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 8. சட்டென உதறத்தோன்றும்
  யாருக்கும்
  காதலைக்கொல்வதில்
  பெரிய சிரமம் ஒன்றுமில்லை

  சாதாரணமாய் சொல்வது போல பெரிய விஷயத்தை அனாயாசமாய் சொல்லி விட்டீர்கள்

  ReplyDelete
 9. அன்பு நன்றிகள் மாய உலகம் ராஜேஸ் கருத்து பதிந்தமைக்கு..

  ReplyDelete
 10. அன்பு நன்றிகள் ரத்னவேல் ஐயா கருத்து பதிந்தமைக்கு...

  ReplyDelete
 11. அன்பு நன்றிகள் விடிவெள்ளி கருத்து பதிந்தமைக்கு...

  ReplyDelete
 12. அன்பு நன்றிகள் மாலதி கருத்து பதிந்தமைக்கு....

  ReplyDelete
 13. அன்பு வரவேற்புகள் பரிவை சே. குமார்..

  அன்பு நன்றிகள் கருத்து பதிந்தமைக்கு...

  ReplyDelete
 14. அன்பு நன்றிகள் வேதா மேடம் கருத்து பதிந்தமைக்கு....

  ReplyDelete
 15. நட்பு தின நல்வாழ்த்துகள் விடிவெள்ளி...

  ReplyDelete
 16. அன்பு நன்றிகள் ராமானுசம் ஐயா கருத்து பதிந்தமைக்கு...

  ReplyDelete
 17. அன்பு நன்றிகள் ரிஷபன் கருத்து பதிந்தமைக்கு...

  ReplyDelete
 18. காதலின் வலியை
  கண்ணீர் வழிய
  கவிதையின் வழியே...

  காயம்பட்டோருக்கு
  கவிதை ஒத்தடம்

  அருமை.

  ReplyDelete
 19. காதலைக் கொல்லுதல்
  சிரமம் இல்லைதான்
  ஆயினும்
  மிகப் பாவம் இல்லையோ
  அழகான மனம் கவர்ந்த கவிதை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 20. அன்பு நன்றிகள் சிவகுமாரன் கருத்து பதிந்தமைக்கு....

  ReplyDelete
 21. அன்பு நன்றிகள் ரமணி சார்.. பாவம் தான் என்ன செய்வது ஒரு சிலர் அப்படியும் இருக்காங்களே...

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...