உணரும் உண்மை அத்தனையும் தந்ததே
தானத்தில் எப்போதும் தன்னையே தந்து
அவன் அல்லாது வேறு யார் இப்புவியில்
நேர்கொண்ட பார்வை நிமிர்ந்த நன்னடை
பார்வையின் தீட்சண்யம் கொல்லும் தீயவரை
கயமை கொன்று நெருப்பில் ஜொலிக்கும்
தீப்பொறி பறக்கும் கவிதை நடையாம்
செல்லம்மாவல்லாது கற்பனையில் தனக்கொரு
காதலி அமைத்து கண்ணம்மாவென்று
உருகி தவித்து பித்தனாய் திரிந்து தெளிந்து
கவிதையில் தன்னை மொத்தமாய் இழந்து
ஒழுக்கத்தில் சீலனாம் குழந்தை உள்ளமாம்
நேர்மை உள்ளவனாம் வாய்மையில் சிறந்தவனாம்
இத்தனை சொன்னதும் சொல்லப்போவதும்
என் உள்ளத்து கவிக்காதலன் பாரதியையே
Tweet |
No comments:
Post a Comment