வயது முதிர்ந்து
மூப்பு தொடர்ந்து
ஊன்று கோலுடன்
கண்பார்வை மங்கி
காது மந்தமாகி
செரிக்க முடியாத உணவை
என் தோழனே
உன் நினைவுகள்
செரிக்கிறதே....
என்னை காண வருவாயா
முதிர்ந்த கிழவியாயினும்
உன் தோழியல்லவா நான்
சண்டையிட்ட நாட்கள்
கோபமுடன் முகம் திருப்பி
அமரும்போதெல்லாம்
என்னை வெறுப்பேற்றியே
சிரிக்க வைப்பாயே நண்பா
என் பேரப்பிள்ளைகளுக்கும்
நண்பர்கள் உண்டுடா
நான் கொண்ட நட்பை
வாய் பிளந்து பார்த்தனர்
எங்கே நீயென கேட்டனர்
எங்கே நண்பா நீ
இந்த தோழியின் நினைவு
உனக்கும் வருவதுண்டா?
என்னை போல நீயும்
நம் நட்பு கொண்ட நாட்களை
அசை போடுகிறாயா
உலகை விட்டு மறையுமுன்
ஒரே ஒரு முறை
என் கண்பார்வை மங்கி போகுமுன்
ஒரே ஒரு முறை
உன்னை பார்க்கும் சந்தர்ப்பம்
மீண்டும் வருமா நண்பா?
Tweet |
No comments:
Post a Comment