"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, December 22, 2007

விவாகரத்தை ரத்து செய்ய கூடாதா?

இனப்போர் மக்களை பிரிக்கிறது
மனப்போர் மனதை வெறுமையாக்குகிறது
கை தட்டி ஓசை உண்டாக்க
காதல் ஒன்றும் விளையாட்டல்ல
விடிந்தால் கலைந்துவிடும் கனவுமல்ல
உணர்வோடு பிணைந்து
உள்ளத்தோடு இணைந்து
மனதோடு கலந்து
திருமணத்தில் முடியும்
அன்பில் தொடங்கும்
இல்வாழ்க்கை
காதலின் ஆழமான
அழுத்தமான அஸ்திவாரம்......
இதை உணராது போகும்
மனைவி கணவன் இடையே
எத்தனை மனவேறுபாடுகள்
கணக்கிலடங்கா இடர்பாடுகள்
தொடங்கினால் முடியாத
சண்டை சச்சரவுகள்
தவிர்க்க முடியாதா
விவாகரத்து தவிர்க்கவே முடியாதா
தன் மனதை வேண்டியவனுக்கு
விட்டு கொடுத்து தானே இணைந்தாய்
மனதை விட்டு கொடுத்தவளுக்கு
ஈகோவை விட்டு கொடுக்க முடியாதா
கருணை மனு இட்ட கணவனுக்காக
மறு பரிசீலனை செய்ய கூடாதா
எதிர்காலம் கேள்விகுறியாகும்
பிள்ளைகளுக்காக விட்டு கொடுக்க கூடாதா
எல்லாரும் இன்புற்று இருக்க
கொஞ்சம் பொறுத்து போக கூடாதா
விவாகரத்தை ரத்து செய்ய கூடாதா...

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...