இருப்பு கொள்ள முடியாமல் தவிக்கிறேன்
ஏன் இறைவா இப்படி ஒரு வலி
ஏன் படைத்தாய் இப்படி ஒரு பிறவி
சந்தோஷத்தில் பங்கு கொண்ட எனக்கு
இந்த பரிதவிப்பில் பங்கு இல்லையே
உயிர் பிழைப்பாளா உத்தம பத்தினி
உயிரை உயிருள் சுமந்து
எனக்கு ஒரு வாரிசு தர
இதோ இந்த நொடியில்
முனகல் சத்தம் அதிகமாக
எனக்கு இருப்பு கொள்ளவில்லை
ஓரிடத்தில் அமர முடியாமல்
என்ன தவிப்பு இது
சத்தம் நிற்க கதவு திறக்க
ரோஜாகொத்தை உள்ளங்கையில்
பொத்தி கொண்டு காண்பிக்க
கால் தரையில் நிற்கவில்லை
எனக்கா எனக்கேவா என் பொக்கிஷமா
என் முகமா இல்லை
என் மனைவியின் சாயலா
இரண்டும் கலந்த அழகு பிம்பமா
க்ருஷ்ண விக்ரஹமா?
என்ன சொல்வேன் எப்படி சொல்வேன்
என் சந்தோஷம் பகிர ஓடுகிறேன்
மனைவி கண்மூடி அயற்சியில்
உயிரை உலகுக்கு காண்பித்த
சந்தோஷ அலுப்பு முகத்தில்
என்னை அப்பா என்று அழைக்க
உன்னத உறவை தந்தவள்
கைகூப்பி கண்ணீரோடு பார்க்கிறேன்
தாய்மை எத்தனை புனிதம்.....
Tweet |
No comments:
Post a Comment