"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, December 22, 2007

என்ன தவம் செய்தனை?

மஞ்சள் அரைத்து முகத்தில் பூசி
சந்தனம் மணக்க உடலில் பூசி
மேனி மினுமினுக்க கஸ்தூரி மஞ்சளும்
புருவம் வளர தேங்காய் எண்ணையும்
உதடு சிவக்க வெண்ணையும் தடவி
நீர்திவலைகள் வைரமாய் சிதற
கண்மணீ என்ற குரலில்
அரைகுறை குளியலில்
துவாலையை சுற்றிக்கொண்டு
கணவன் முன்பு நின்றால்
கண்சிமிட்டாமல்
பார்ப்பதை கண்டு
வெட்கி கோணி
தலை குனிந்து
கால்விரலில் கோலம் போட
ம்ம் இன்னும் எத்தனை நேரம்
இப்படி ஈரத்தோடு நிற்பாய்
சென்று உடுத்திக்கொண்டு வா
பிள்ளை தத்தெடுக்க
இன்று போகிறோம்
கருணை இல்லத்திற்கு.....
அன்பு கணவனின்
கருணை மனதை
என்னவென்று சொல்வது
பிள்ளையில்லா மலடு
உலகம் குத்திய முத்திரையை
தத்தெடுத்து துடைக்கும்
இந்த கணவன் அமைய
என்ன தவம் செய்தேன்?

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...