"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, December 22, 2007

அந்த காலம் இந்த காலம்

நம் காலமா இப்போதிருக்கும் நிலை?
பெரியவர் பேச்சு கேட்டு
அதன்படி நடந்து
இஷ்டமில்லா படிப்பும் படித்து
இஷ்டமில்லா வாழ்வும் வாழ்ந்து
இதோ பெற்றேன் நல்முத்து பிள்ளைகளை
என்னை கண்டித்து வளர்த்த
என் தாய் தந்தை போலல்லாமல்
அன்பாய் அரவணைத்தேன்
அதிக சுதந்திரம் தந்தேன்
நான் அறியாததெல்லாம்
என் பிள்ளை செய்து
என்னை அசத்தியப்போது
அசந்து நின்று பாராட்டினேன்
கொண்டாடினேன் திறமைகளை
அதிக செல்லமும் கொடுத்தேன்
பலனை அனுபவிக்கிறேன்
சிறு வார்த்தை கூட பொறுக்காமல்
என்னிடம் சொல்லாமல்
ஓடி போகிறேன் என்கிறானே
என்னை பயமுறுத்தும்
என் பிள்ளையை கண்டு
அதிர்ச்சியாய் நிற்கிறேன்
என் காலம் வேறு
என் பிள்ளையின் காலம் வேறு
பெற்றோர் பேச்சை மீறாமல்
சொல்பேச்சு கேட்டது அந்த காலம்
பிள்ளை பேச்சு மீறாமல்
பிள்ளையின் அட்டகாசத்தை கண்டு
அமைதியாய் இருக்கணும்
அது இந்த காலம்...
அறிவாய் பேசும் பிள்ளைக்கும்
என்னை போலவே
மூக்கு நுனியில் கோபம் நிற்குமா?
மெத்தப்படித்தும் அடங்கி இருந்தது
அந்த காலம்
மெத்த படித்து முன்னுச்சி முடிஒதுக்கி
காலரை தூக்கி விட்டு கொள்வது
இந்த காலம்...
அடித்து திருத்தியது அந்த காலம்
அன்பாய் அரவணைத்து
நல்லுரை கூறவேண்டும் என்பதே
இந்த காலம்
அடியை வெறுக்கும் பிள்ளைகள்
சுடுசொல் தாங்கா பிள்ளைகள்
வெறுப்பை உமிழும் பிள்ளைகள்
மூக்கு நுனியில் கோபம்
துன்பத்திலும் அசரா பிள்ளைகள்
நாமும் தான் சற்றே இளகுவோமே
அன்பாய் சொல்லி பார்ப்போமே
கேட்காமல் போவார்களா பிள்ளைகள்
நம்பிக்கையோடு முயற்ச்சிக்கிறேன்
பிள்ளைகளே இக்காலத்து பிள்ளைகளே
அன்பாய் இருந்தால் தீருமா உங்கள் கோபம்?

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...