"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, December 22, 2007

நீ மட்டும் என்னுடையவளானால்....

மௌனங்களை கூட மொழிபெயர்ப்பேன்
நீ மட்டும் பேசினால்
வாழ்க்கையின் வெறுமைகளுக்கு
வண்ணம் தீட்டுவேன்
நீ மட்டும் என் தூரிகையானால்
என் இதயம் கூட பறக்கும்
சந்தோஷ சிறகு கொண்டு
நீ மட்டும் உடனிருந்தால்
காற்றிலேயே கவிதை எழுதுவேன்
நீ மட்டும் என் உணர்வானால்
உயிர்களை வருத்தாமல்
உள்ளங்களை மட்டுமே வாங்குவேன்
நீ மட்டும் என் உயிரானால்
பூக்கள் இல்லாமலே
மணத்தை நுகர்வேன்
உன் நினைவு என் மனதில் பூத்தால்
காணும் கனவெல்லாம்
நிஜமாக்கி கொள்வேன்
நீ என் மதியானால்
கானல் நீரை கூட
பார்த்து மகிழ்வேன்
நீ என் நினைவானால்
காலங்களை கடந்தும்
காத்திருப்பேன்
உன் வரவு மட்டும் நிஜமானால்
உன்னை என்னுடையதாக்கி கொள்வேன்
நீ மட்டும் என் வாழ்வானால்
இறந்தாலும் பிரியாது
உன்னுடனே சங்கமிப்பேன்
நீ மட்டும் என்னுடையவளானால்....

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...