வாழ்வை வளமாக்கி
நோக்கும் திசையெங்கும்
மயக்கும் நந்தவனமாகி
பூத்து குலுங்கும் புஷ்பவனமாகி
காண்போர் மயங்கி
கண்ட இடமே சொர்க்கமென
தென்றல் தாலாட்ட
சுகமான உறக்கமாகி
கண் சொக்கி கண்ணயறும் நேரம்
எந்திரிடி இன்னும் என்ன தூக்கம்
அம்மாவின் காட்டு கத்தலில்
பரபரவென கண்விழித்தால்
ரோட்டோரம் ஆட்டோ இரைச்சல்
ஆப்பக்கடை வைத்துள்ள
அம்மாவின் அன்பு கூச்சல்
ரோட்டோர வாழ்க்கை
சுகமில்லை என்று சொன்னது யார்
உறங்கி விட்டால் எல்லாருமே
தேவர்களாக கனவு கண்டு மகிழலாமே
நன்றாய் படித்து
அதிக மதிப்பெண் பெற்று
மாநிலம் போற்றும் மாணக்கனாய்
தாயின் ஆசிர்வாதத்தில் வெற்றி பெற்று
நானும் சாதிப்பேன் என்றாவது ஓர் நாள்
ரோட்டோர வாழ்க்கை இல்லை அப்போது
ஒண்டிக்கொள்ள சொந்தமாய் ஒரு குடிசை
எங்களுக்கும் கிடைக்குமே......
Tweet |
No comments:
Post a Comment