வழி ஒன்றும் தெரியவில்லை
ஏக்கங்களே வாழ்வாகிவிட்டபடியால்
மனதை சமன் செய்யமுடியவில்லை
பேசாதிருந்தாலும் கவலை
பேசினாலும் தொல்லை
என்ன தான் தீர்வு இதற்கு
நிலையில்லா உலகில்
என்னை நிலைநிறுத்திக்கொள்ள
எடுக்கும் முயற்சிகள் எல்லாமே
முடிவில்லா தொடக்கங்கள்
கைபிடித்து நடைபழக்கிய
தந்தையும் இல்லை எனக்காக பேச
அடிபட்டு துவண்டு விழுந்தால்
தாயும் இல்லை தாங்கி கொள்ள
அம்மாவை அடிக்காதே அப்பா
என்று அவர் கைப்பிடிக்க
குழந்தை செல்வமும் இல்லையே
என்ன தான் செய்வேன்
இனி பொறுப்பதில்லை
அடித்தால் பொறுக்கலாம்
சுடுசொல் வீசினால்
அமைதி காக்கலாம்
சந்தேகத்தில் உமிழ்ந்தால்
அணைத்து கொள்வது தான் சரி
அக்னி பகவானே நீயே துணை
எத்தனை முறை தான்
சந்தேக தீயில் குளிப்பது
இன்னுமொருமுறை
என்னை சந்தேகப்பட்டால்
அக்னிபகவானே நீயே
என்னை அணைத்துகொள்
என்னை இழந்து
தன்னை உணரட்டும்
அவர் தவறுகளே
அவரை திருத்தட்டும்...
Tweet |
No comments:
Post a Comment