"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Thursday, December 27, 2007

இரக்கமற்று கொன்றவர் உறங்குவாரா இனி???

மனிதமே மனிதமே
மனிதனின் மனதை
கொன்ற இரக்கமற்ற
தீவிரவாதமே

அரசியல்வாதியையும்
நல்லவரையும் ஒன்றாய்
கொன்று பசி அடங்குகிறாயே
பகைமை நாடு
சொல்பவர் மடையர்
தோழமைநாடு
என் சகோதர நாடு

வசிப்பதும் வதைப்பதும்
தோழனும் சகோதரனுமே
அடுத்து வசிப்பதால் தோழனே
தாய்நாட்டில் இருந்து
பிரிந்ததால் என் சகோதரனே

நாடே ரத்த கண்ணீர் வடிக்கிறதே
நல்லதை செய்யாதவரே
தீமை புரியாதீர்
நல்லது செய்பவரை
கொன்று குவிக்காதீர்

பெண்ணென்றும் பார்க்கவில்லை
இரக்கமும் தோன்றவில்லை
நாட்டை சீராக்க நினைத்து
மனித வெடிகுண்டுக்கு
இரையான சகோதரியே
பெனாசீர்பூட்டோவே

இறக்கும்போதும்
உன் நாடு இனி
போகும் அவலத்தை
நினைத்து துளிர்த்த
கடைசி துளி கண்ணீரும்
கன்னத்தில் வீழுமுன்
ரத்தக்கறையானதே

கழுத்தில் குண்டு பாய்ந்து
உயிர் கூடுவிட்டு பறந்து
அருபமாய் உன் நாட்டை கண்டு
கண்ணீர் விடுகிறாயா சகோதரி

மனிதம் தொலைத்த நாட்டை கண்டு
துடிக்கிறதா உன் ஆத்மா
இனி யார் காப்பாற்றுவார்
உன் மக்களை உன் நாட்டை
உன்னை பலிகொடுத்து
உன் நாட்டை பரிதவிக்கவிட்டதே

இரக்கமற்ற செயல் புரிந்து
உன்னை கொன்றவர்
உறங்குவாரா இனி நிம்மதியாக??

2 comments:

  1. அழகான வரிகள்!!


    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நல்லாருக்கு அக்கா. தொடர்ந்து எழுதுங்களேன். 2007-ஓட மூட்டை கட்டி வச்சிட்டீங்க போல?!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...